| 1 | இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. | எரே 4:4 எரே 3:12 எரே 3:22 |
| 2 | நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். | எரே 5:2 உபா 10:20 ஏசா 45:23 ஏசா 48:1 ஏசா 48:2 ஏசா 65:16 |
| 3 | யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். | ஆதி 3:18 ஓசி 10:12 மத் 13:7 மத் 13:22 மாற் 4:7 மாற் 4:18 மாற் 4:19 லூக் 8:7 லூக் 8:14 கலா 6:7 கலா 6:8 |
| 4 | யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள். | எரே 9:26 உபா 10:16 உபா 30:6 எசே 18:31 ரோம 2:28 ரோம 2:29 கொலோ 2:11 |
| 5 | தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள். | எரே 5:20 எரே 9:12 எரே 11:2 |
| 6 | சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன். | எரே 4:21 எரே 50:2 எரே 51:12 எரே 51:27 ஏசா 62:10 |
| 7 | உன் தேசத்தைப் பாழாக்கிவிடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளை சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார். | எரே 5:6 எரே 25:38 எரே 49:19 எரே 50:17 எரே 50:44 2இரா 24:1 2இரா 25:1 தானி 7:4 |
| 8 | இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே. | எரே 6:26 ஏசா 15:3 ஏசா 22:12 ஏசா 32:11 யோவே 2:12 யோவே 2:13 ஆமோ 8:10 |
| 9 | அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 39:4 எரே 39:5 எரே 52:7 1சாமு 25:37 1சாமு 25:38 2இரா 25:4 சங் 102:4 ஏசா 19:3 ஏசா 19:11 ஏசா 19:12 ஏசா 19:16 ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 22:3-5 |
| 10 | அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன். | எரே 1:6 எரே 14:13 எரே 32:17 எசே 11:13 |
| 11 | வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது. | எரே 8:19 எரே 9:1 எரே 9:7 எரே 14:17 ஏசா 22:4 புலம் 2:11 புலம் 3:48 புலம் 4:3 புலம் 4:6 புலம் 4:10 |
| 12 | இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களோடே நியாயம் பேசுவேன். | எரே 1:16 எசே 5:8 எசே 6:11-13 எசே 7:8 எசே 7:9 |
| 13 | இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே. | ஏசா 13:5 ஏசா 19:1 நாகூ 1:3 மத் 24:30 வெளிப் 1:7 |
| 14 | எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரமநினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். | ஏசா 1:16-19 ஏசா 55:7 எசே 18:31 மத் 12:33 மத் 15:19 மத் 15:20 மத் 23:26 மத் 23:27 லூக் 11:39 யாக் 4:8 |
| 15 | தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது. | எரே 6:1 எரே 8:16 நியா 18:29 நியா 20:1 |
| 16 | ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள். | எரே 6:18 எரே 31:10 எரே 50:2 ஏசா 34:1 |
| 17 | அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப் போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 6:2 எரே 6:3 2இரா 25:1-4 ஏசா 1:8 லூக் 19:43 லூக் 19:44 லூக் 21:20-24 |
| 18 | உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே. | எரே 2:17 எரே 2:19 எரே 5:19 எரே 6:19 எரே 26:19 யோபு 20:5-16 சங் 107:17 நீதி 1:31 நீதி 5:22 ஏசா 50:1 |
| 19 | என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. | எரே 9:1 எரே 9:10 எரே 13:17 எரே 14:17 எரே 14:18 எரே 23:9 எரே 48:31 எரே 48:32 சங் 119:53 சங் 119:136 ஏசா 15:5 ஏசா 16:11 ஏசா 21:3 ஏசா 22:4 புலம் 1:16 புலம் 2:11 புலம் 3:48-51 தானி 7:15 தானி 7:28 தானி 8:27 ஆபகூ 3:16 லூக் 19:41 லூக் 19:42 ரோம 9:2 ரோம 9:3 ரோம 10:1 கலா 4:19 |
| 20 | நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது. | எரே 4:6 எரே 17:18 லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:24 லேவி 26:28 சங் 42:7 ஏசா 13:6 புலம் 3:47 எசே 7:25 எசே 7:26 எசே 14:21 யோவே 1:15 மத் 10:28 2தெச 1:9 |
| 21 | நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன். | எரே 4:5 எரே 4:6 எரே 4:19 எரே 6:1 2நாளா 35:25 2நாளா 36:3 2நாளா 36:6 2நாளா 36:7 2நாளா 36:10 2நாளா 36:17 |
| 22 | என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். | எரே 5:4 எரே 5:21 எரே 8:7-9 உபா 32:6 உபா 32:28 சங் 14:1-4 ஏசா 1:3 ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 27:11 ஏசா 29:10-12 ஏசா 42:19 ஏசா 42:20 ஓசி 4:1 ஓசி 4:6 மத் 23:16-26 ரோம 1:22 ரோம 3:11 |
| 23 | பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. | எரே 9:10 ஆதி 1:2 ஏசா 24:19-23 வெளிப் 20:11 |
| 24 | பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. | எரே 8:16 எரே 10:10 நியா 5:4 நியா 5:5 1இரா 19:11 சங் 18:7 சங் 77:18 சங் 97:4 சங் 114:4-7 ஏசா 5:25 எசே 38:20 மீகா 1:4 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 |
| 25 | பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. | ஓசி 4:3 செப் 1:2 செப் 1:3 |
| 26 | பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின. | எரே 12:4 எரே 14:2-6 உபா 29:23-28 சங் 76:7 சங் 107:34 ஏசா 5:9 ஏசா 5:10 ஏசா 7:20-25 மீகா 3:12 |
| 27 | தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 4:7 எரே 7:34 எரே 12:11 எரே 18:16 2நாளா 36:21 ஏசா 6:11 ஏசா 6:12 ஏசா 24:1 ஏசா 24:3-12 எசே 6:14 எசே 33:28 |
| 28 | இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம்பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுப் திரும்புவதும் இல்லை. | எரே 4:23-26 எரே 12:4 எரே 23:10 ஏசா 24:4 ஏசா 33:8 ஏசா 33:9 ஓசி 4:3 யோவே 1:10 |
| 29 | குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும். | எரே 39:4-6 எரே 52:7 2இரா 25:4-7 ஏசா 30:17 ஆமோ 9:1 |
| 30 | பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். | எரே 5:31 எரே 13:21 ஏசா 10:3 ஏசா 20:6 ஏசா 33:14 எபிரெ 2:3 |
| 31 | கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள். | எரே 6:24 எரே 13:21 எரே 22:23 எரே 30:6 எரே 48:41 எரே 49:22 எரே 49:24 எரே 50:43 ஏசா 13:8 ஏசா 21:3 ஓசி 13:13 1தெச 5:3 |