| 1 | இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: | எரே 2:4 எரே 13:15-17 எரே 22:2 எரே 42:15 1இரா 22:19 சங் 50:7 ஏசா 1:10 ஏசா 28:14 ஓசி 4:1 ஆமோ 7:16 1தெச 2:13 வெளிப் 2:29 |
| 2 | புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். | லேவி 18:3 லேவி 20:23 உபா 12:30 உபா 12:31 எசே 20:32 |
| 3 | ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். | எரே 10:8 எரே 2:5 லேவி 18:30 1இரா 18:26-28 மத் 6:7 ரோம 1:21 1பேது 1:18 |
| 4 | வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். | சங் 115:4 சங் 135:15 ஏசா 40:19 ஏசா 40:20 |
| 5 | அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யக்கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். | சங் 115:5-8 சங் 135:16-18 ஆபகூ 2:19 1கொரி 12:2 வெளிப் 13:14 வெளிப் 13:15 |
| 6 | கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. | யாத் 8:10 யாத் 9:14 யாத் 15:11 உபா 32:31 உபா 33:26 2சாமு 7:22 சங் 35:10 சங் 86:8-10 சங் 89:6-8 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 46:5 ஏசா 46:9 |
| 7 | ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. | எரே 5:22 யோபு 37:23 யோபு 37:24 லூக் 12:5 வெளிப் 15:4 |
| 8 | அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. | எரே 10:14 எரே 51:17 எரே 51:18 சங் 115:8 சங் 135:18 ஏசா 41:29 ஆபகூ 2:18 சகரி 10:2 ரோம 1:21 ரோம 1:22 |
| 9 | தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. | 1இரா 10:22 எசே 27:12 |
| 10 | கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். | 1இரா 18:39 2நாளா 15:3 யோவா 17:3 1தெச 1:9 1யோவா 5:20 |
| 11 | வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். | சங் 96:5 |
| 12 | அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். | எரே 32:17 எரே 51:15-19 ஆதி 1:1 ஆதி 1:6-9 யோபு 38:4-7 சங் 33:6 சங் 136:5 சங் 136:6 சங் 146:5 சங் 146:6 சங் 148:4 சங் 148:5 யோவா 1:3 கொலோ 1:16 |
| 13 | அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். | யோபு 37:2-5 யோபு 38:34 யோபு 38:35 சங் 18:13 சங் 29:3-10 சங் 68:33 |
| 14 | மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. | எரே 10:8 எரே 51:17 எரே 51:18 சங் 14:2 சங் 92:6 சங் 94:8 நீதி 30:2 ஏசா 44:18-20 ஏசா 46:7 ஏசா 46:8 ரோம 1:22 ரோம 1:23 |
| 15 | அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும். | எரே 10:8 எரே 8:19 எரே 14:22 எரே 51:18 உபா 32:21 1சாமு 12:21 ஏசா 41:24 ஏசா 41:29 யோனா 2:8 அப் 14:15 |
| 16 | யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். | எரே 51:19 சங் 16:5 சங் 16:6 சங் 73:26 சங் 119:57 சங் 142:5 புலம் 3:24 |
| 17 | அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். | எரே 6:1 எசே 12:3-12 மீகா 2:10 மத் 24:15 |
| 18 | இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 15:1 எரே 15:2 எரே 16:13 உபா 28:63 உபா 28:64 1சாமு 25:29 |
| 19 | ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். | எரே 4:19 எரே 4:31 எரே 8:21 எரே 9:1 எரே 17:13 புலம் 1:2 புலம் 1:12-22 புலம் 2:11-22 புலம் 3:48 |
| 20 | என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. | எரே 4:20 ஏசா 54:2 புலம் 2:4-6 |
| 21 | மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. | எரே 10:8 எரே 10:14 எரே 2:8 எரே 5:31 எரே 8:9 எரே 12:10 எரே 23:9-32 ஏசா 56:10-12 எசே 22:25-30 எசே 34:2-10 யோவா 10:12 யோவா 10:13 சகரி 10:3 |
| 22 | இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது. | எரே 1:15 எரே 4:6 எரே 5:15 எரே 6:1 எரே 6:22 ஆபகூ 1:6-9 |
| 23 | கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். | சங் 17:5 சங் 37:23 சங் 119:116 சங் 119:117 நீதி 16:1 நீதி 20:24 |
| 24 | கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும். | எரே 30:11 சங் 6:1 சங் 38:1 ஆபகூ 3:2 |
| 25 | உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே. | சங் 79:6 சங் 79:7 |