| 1 | ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன். | எரே 4:19 எரே 13:17 எரே 14:17 சங் 119:136 ஏசா 16:9 ஏசா 22:4 புலம் 2:11 புலம் 2:18 புலம் 2:19 புலம் 3:48 புலம் 3:49 எசே 21:6 எசே 21:7 |
| 2 | ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள். | சங் 55:6-8 சங் 120:5-7 மீகா 7:1-7 |
| 3 | அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 9:5 எரே 9:8 சங் 52:2-4 சங் 64:3 சங் 64:4 சங் 120:2-4 ஏசா 59:3-5 ஏசா 59:13-15 மீகா 7:3-5 ரோம 3:13 |
| 4 | நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். | எரே 12:6 சங் 12:2 சங் 12:3 சங் 55:11 சங் 55:12 நீதி 26:24 நீதி 26:25 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:17 மத் 10:21 மத் 10:34 மத் 10:35 லூக் 21:16 |
| 5 | அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள். | எரே 9:5 எரே 9:8 ஏசா 59:13-15 மீகா 6:12 எபே 4:25 |
| 6 | கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 11:19 எரே 18:18 எரே 20:10 சங் 120:2-6 |
| 7 | ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்? | எரே 6:29 எரே 6:30 ஏசா 1:25 ஏசா 48:10 எசே 22:18-22 எசே 26:11 எசே 26:12 சகரி 13:9 மல்கி 3:3 1பேது 1:7 1பேது 4:12 |
| 8 | அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான். | எரே 9:3 எரே 9:5 சங் 12:2 சங் 57:4 சங் 64:3 சங் 64:4 சங் 64:8 சங் 120:3 |
| 9 | இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 5:9 எரே 5:29 ஏசா 1:24 |
| 10 | மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின. | எரே 4:19-26 எரே 7:29 எரே 8:18 எரே 13:16 எரே 13:17 புலம் 1:16 புலம் 2:11 |
| 11 | நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன். | எரே 26:18 எரே 51:37 நெகே 4:2 சங் 79:1 ஏசா 25:2 மீகா 1:6 மீகா 3:12 |
| 12 | இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? | உபா 32:29 சங் 107:43 ஓசி 14:9 மத் 24:15 வெளிப் 1:3 |
| 13 | நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், | எரே 22:9 உபா 31:16 உபா 31:17 2நாளா 7:19 எஸ்றா 9:10 சங் 89:30 சங் 119:53 நீதி 28:4 செப் 3:1-6 |
| 14 | தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 3:17 எரே 7:24 ஆதி 6:5 ரோம 1:21-24 எபே 2:3 எபே 4:17-19 |
| 15 | ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து, | எரே 8:14 எரே 23:15 எரே 25:15 சங் 60:3 சங் 69:21 சங் 75:8 சங் 80:5 ஏசா 2:17 ஏசா 2:22 புலம் 3:15 புலம் 3:19 வெளிப் 8:11 |
| 16 | அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 13:24 லேவி 26:33 உபா 4:27 உபா 28:25 உபா 28:36 உபா 28:64 உபா 32:26 நெகே 1:8 சங் 106:27 எசே 11:17 எசே 12:15 எசே 20:23 சகரி 7:14 யாக் 1:1 |
| 17 | நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | 2நாளா 35:25 யோபு 3:8 பிரச 12:5 ஆமோ 5:16 ஆமோ 5:17 மத் 9:23 மாற் 5:38 |
| 18 | அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள். | எரே 9:10 எரே 9:20 |
| 19 | எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். | எரே 4:31 எசே 7:16-18 மீகா 1:8 மீகா 1:9 |
| 20 | ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். | ஏசா 3:16-4 ஏசா 32:9-13 லூக் 23:27-30 |
| 21 | வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது. | எரே 6:11 எரே 15:7 2நாளா 36:17 எசே 9:5 எசே 9:6 எசே 21:14 எசே 21:15 ஆமோ 6:10 ஆமோ 6:11 |
| 22 | மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தாரென்று சொல். | எரே 7:33 எரே 8:2 எரே 16:4 எரே 25:33 2இரா 9:37 சங் 83:10 ஏசா 5:25 செப் 1:17 |
| 23 | ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; | யோபு 5:12-14 சங் 49:10-13 சங் 49:16-18 பிரச 2:13-16 பிரச 2:19-16 பிரச 9:11 ஏசா 5:21 ஏசா 10:12 ஏசா 10:13 எசே 28:2-9 ரோம 1:22 1கொரி 1:19-21 1கொரி 1:27-29 1கொரி 3:18-20 யாக் 3:14-16 |
| 24 | மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 4:2 சங் 44:8 ஏசா 41:16 ஏசா 45:25 ரோம 5:11 1கொரி 1:31 2கொரி 10:17 கலா 6:14 பிலிப் 3:3 |
| 25 | இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும், | எசே 28:10 எசே 32:19-32 ஆமோ 3:2 ரோம 2:8 ரோம 2:9 ரோம 2:25 ரோம 2:26 கலா 5:2-6 |
| 26 | எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 25:9-26 எரே 27:3-7 எரே 46:1-52 ஏசா 13:1-24 எசே 24:1-32 ஆமோ 1:1-2 செப் 1:1-2 |