| 1 | கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்: |
| 2 | நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன: | எரே 11:6 எரே 34:13-16 யாத் 19:5 2இரா 11:17 2இரா 23:2 2இரா 23:3 2நாளா 23:16 2நாளா 29:10 2நாளா 34:31 |
| 3 | என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்; | உபா 27:26 உபா 28:15-68 உபா 29:19 உபா 29:20 கலா 3:10-13 |
| 4 | நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாதமனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறாரென்று அவர்களுக்குச் சொல்லு. | எரே 31:32 யாத் 24:3-8 உபா 5:2 உபா 5:3 உபா 29:10-15 எசே 20:6-12 எபிரெ 8:8-10 |
| 5 | இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன். | ஆதி 22:16-18 ஆதி 26:3-5 சங் 105:9-11 |
| 6 | அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள். | எரே 3:12 எரே 7:2 எரே 19:2 ஏசா 58:1 சகரி 7:7 |
| 7 | நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன். | 1சாமு 8:9 எபே 4:17 2தெச 3:12 |
| 8 | ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச்சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும். அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார். | எரே 3:17 எரே 6:16 எரே 6:17 எரே 7:24 எரே 7:26 எரே 9:13 எரே 9:14 எரே 35:15 எரே 44:17 நெகே 9:16 நெகே 9:17 நெகே 9:26 நெகே 9:29 எசே 20:8 எசே 20:18-21 சகரி 7:11 |
| 9 | பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது. | எரே 5:31 எரே 6:13 எரே 8:10 எசே 22:25-31 ஓசி 6:9 மீகா 3:11 மீகா 7:2 மீகா 7:3 செப் 3:1-4 மத் 21:38 மத் 21:39 மத் 26:3 மத் 26:4 மத் 26:15 யோவா 11:53 அப் 23:12-15 |
| 10 | அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள். | எரே 3:10 1சாமு 15:11 2நாளா 34:30-33 ஓசி 6:4 ஓசி 7:16 செப் 1:6 |
| 11 | ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 11:17 எரே 6:19 எரே 19:3 எரே 19:15 எரே 23:12 எரே 35:17 எரே 36:31 2இரா 22:16 2நாளா 34:24 எசே 7:5 |
| 12 | அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை. | எரே 2:28 எரே 44:17-27 உபா 32:37 நியா 10:14 2நாளா 28:22 ஏசா 45:20 |
| 13 | யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி. | எரே 2:28 எரே 3:1 எரே 3:2 உபா 32:16 உபா 32:17 2இரா 23:4 2இரா 23:5 2இரா 23:13 ஏசா 2:8 ஓசி 12:11 |
| 14 | ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன். | எரே 7:16 எரே 14:11 எரே 15:1 யாத் 32:10 நீதி 26:24 நீதி 26:25 1யோவா 5:16 |
| 15 | துர்ச்சனரோடு மகா தீவினை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே. | லூக் 8:28 |
| 16 | நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது. | சங் 52:8 ரோம 11:17-24 |
| 17 | பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 2:21 எரே 12:2 எரே 24:6 எரே 42:10 எரே 45:4 2சாமு 7:10 சங் 44:2 சங் 80:8 சங் 80:15 ஏசா 5:2 ஏசா 61:3 எசே 17:5 |
| 18 | அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர். | எரே 11:19 1சாமு 23:11 1சாமு 23:12 2இரா 6:9 2இரா 6:10 2இரா 6:14-20 எசே 8:6-18 மத் 21:3 ரோம 3:7 |
| 19 | மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன். | நீதி 7:22 ஏசா 53:7 |
| 20 | சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். | எரே 12:1 ஆதி 18:25 சங் 98:9 அப் 17:31 |
| 21 | ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்: | எரே 12:5 எரே 12:6 எரே 20:10 மீகா 7:6 மத் 10:21 மத் 10:34-36 லூக் 4:24 |
| 22 | இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள். | எரே 9:21 எரே 18:21 2நாளா 36:17 புலம் 2:21 1தெச 2:15 1தெச 2:16 |
| 23 | அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 11:19 எரே 44:27 ஏசா 14:20-22 |