| 1 | ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது. | ஏசா 18:3 ஏசா 33:13 ஏசா 41:1 ஏசா 43:9 ஏசா 49:1 நியா 5:3 நியா 5:31 சங் 49:1 சங் 49:2 சங் 50:1 சங் 96:10 மாற் 16:15 மாற் 16:16 வெளிப் 2:7 |
| 2 | சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். | ஏசா 24:1-23 எரே 25:15-29 யோவே 3:9-14 ஆமோ 1:1-2 செப் 3:8 சகரி 14:3 சகரி 14:12-16 ரோம 1:18 வெளிப் 6:12-17 வெளிப் 14:15-20 வெளிப் 19:15-21 வெளிப் 20:9 வெளிப் 20:15 |
| 3 | அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும். | ஏசா 14:19 ஏசா 14:20 2இரா 9:35-37 எரே 8:1 எரே 8:2 எரே 22:19 எசே 39:4 எசே 39:11 யோவே 2:20 |
| 4 | வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும். | ஏசா 13:10 ஏசா 14:12 சங் 102:25 சங் 102:26 எரே 4:23 எரே 4:24 எசே 32:7 எசே 32:8 யோவே 2:30 யோவே 2:31 யோவே 3:15 மத் 24:29 மத் 24:35 மாற் 13:24 மாற் 13:25 அப் 2:19 அப் 2:20 2பேது 3:7-12 வெளிப் 6:13 வெளிப் 6:14 வெளிப் 8:12 வெளிப் 20:11 |
| 5 | வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும். | உபா 32:14 உபா 32:42 சங் 17:13 எரே 46:10 எரே 47:6 எசே 21:3-5 எசே 21:9-11 செப் 2:12 வெளிப் 1:16 |
| 6 | போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும். | ஏசா 63:3 எரே 49:13 எசே 21:4 எசே 21:5 எசே 21:10 |
| 7 | அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போகும். | எண் 23:22 எண் 24:8 உபா 33:17 யோபு 39:9 யோபு 39:10 சங் 92:10 |
| 8 | அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம். | ஏசா 26:21 ஏசா 35:4 ஏசா 49:26 ஏசா 59:17 ஏசா 59:18 ஏசா 61:2 ஏசா 63:4 உபா 32:35 உபா 32:41-43 சங் 94:1 எரே 46:10 மீகா 6:1 லூக் 18:7 ரோம 2:5 ரோம 2:8 ரோம 2:9 2தெச 1:6-10 வெளிப் 6:10 வெளிப் 6:11 வெளிப் 18:20 வெளிப் 19:2 |
| 9 | அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும். | ஆதி 19:28 உபா 29:23 யோபு 18:15 சங் 11:6 லூக் 17:29 யூதா 1:7 வெளிப் 19:20 வெளிப் 21:8 |
| 10 | இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை. | ஏசா 1:31 ஏசா 66:24 எரே 7:20 எசே 20:47 எசே 20:48 மாற் 9:43-48 |
| 11 | நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார். | ஏசா 13:20-22 ஏசா 14:23 செப் 2:14 வெளிப் 18:2 வெளிப் 18:21-23 |
| 12 | ராஜ்யபாரம்பண்ண அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள். | ஏசா 3:6-8 பிரச 10:16 பிரச 10:17 |
| 13 | அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும். | ஏசா 32:13 ஏசா 32:14 ஓசி 9:6 செப் 2:9 |
| 14 | அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும். | ஏசா 13:21 |
| 15 | அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும். |
| 16 | கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். | ஏசா 30:8 உபா 31:21 யோசு 1:8 நீதி 23:12 தானி 10:21 ஆமோ 3:7 மல்கி 3:16 யோவா 5:39 யோவா 10:35 2பேது 1:19 மத் 5:18 லூக் 21:33 |
| 17 | அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும். | யோசு 18:8 சங் 78:55 அப் 13:19 அப் 17:26 |