| 1 | அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். | ஏசா 26:21 |
| 2 | அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். | ஏசா 5:1-7 எண் 21:17 |
| 3 | கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். | ஏசா 46:4 ஏசா 46:9 ஏசா 60:16 ஆதி 6:17 ஆதி 9:9 எசே 34:11 எசே 34:24 எசே 37:14 எசே 37:28 |
| 4 | உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்; | ஏசா 12:1 ஏசா 26:20 ஏசா 26:21 ஏசா 54:6-10 சங் 85:3 சங் 103:9 எசே 16:63 நாகூ 1:3-7 2பேது 2:9 |
| 5 | இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான். | ஏசா 25:4 ஏசா 26:3 ஏசா 26:4 ஏசா 45:24 ஏசா 56:2 ஏசா 64:7 யோசு 9:24 யோசு 9:25 யோசு 10:6 யோபு 22:21 லூக் 13:34 லூக் 14:32 லூக் 19:42 எபிரெ 6:18 |
| 6 | யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். | ஏசா 6:13 ஏசா 37:31 ஏசா 49:20-23 ஏசா 54:1-3 ஏசா 60:22 சங் 92:13-15 எரே 30:19 ஓசி 2:23 ஓசி 14:5 ஓசி 14:6 சகரி 2:11 சகரி 10:8 சகரி 10:9 ரோம 11:16-26 கலா 3:29 பிலிப் 3:3 வெளிப் 11:15 |
| 7 | அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ? | ஏசா 10:20-25 ஏசா 14:22 ஏசா 14:23 ஏசா 17:3 ஏசா 17:14 எரே 30:11-16 எரே 50:33 எரே 50:34 எரே 50:40 எரே 51:24 தானி 2:31-35 நாகூ 1:14 நாகூ 3:19 |
| 8 | தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார். | ஏசா 57:16 யோபு 23:6 சங் 6:1 சங் 38:1 சங் 103:14 எரே 10:24 எரே 30:11 எரே 46:28 1கொரி 10:13 1பேது 1:6 |
| 9 | ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன். | ஏசா 1:24 ஏசா 1:25 ஏசா 4:4 ஏசா 48:10 சங் 119:67 சங் 119:71 நீதி 20:30 எசே 20:38 எசே 24:13 தானி 11:35 மல்கி 3:2 மல்கி 3:3 1கொரி 11:32 எபிரெ 12:6 எபிரெ 12:9-11 |
| 10 | அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும். | ஏசா 5:9 ஏசா 5:10 ஏசா 6:11 ஏசா 6:12 ஏசா 17:9 ஏசா 25:2 ஏசா 64:10 எரே 26:6 எரே 26:18 புலம் 1:4 புலம் 2:5-9 புலம் 5:18 எசே 36:4 மீகா 3:12 லூக் 19:43 லூக் 19:44 லூக் 21:20-24 |
| 11 | அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோகும்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார். | சங் 80:15 சங் 80:16 எசே 15:2-8 எசே 20:47 மத் 3:10 யோவா 15:6 |
| 12 | அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள். | ஏசா 11:11-16 ஏசா 24:13-16 ஏசா 56:8 ஆதி 15:18 சங் 68:22 சங் 72:8 |
| 13 | அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள். | ஏசா 2:11 |