| 1 | தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. | எரே 25:15 எரே 25:22 எரே 47:4 எசே 26:1-28 யோவே 3:4-8 ஆமோ 1:9 ஆமோ 1:10 சகரி 9:2 சகரி 9:4 |
| 2 | தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள். | ஏசா 41:1 ஏசா 47:5 சங் 46:10 ஆபகூ 2:20 |
| 3 | சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது. | 1நாளா 13:5 எரே 2:18 |
| 4 | சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது. | எரே 47:3 எரே 47:4 எசே 26:3-6 ஓசி 9:11-14 வெளிப் 18:23 |
| 5 | எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும். | ஏசா 19:16 யாத் 15:14-16 யோசு 2:9-11 |
| 6 | கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள். | ஏசா 23:10 ஏசா 23:12 ஏசா 21:15 |
| 7 | பூர்வநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம் போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோகும். | ஏசா 22:2 |
| 8 | கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே. | உபா 29:24-28 எரே 50:44 எரே 50:45 வெளிப் 18:8 |
| 9 | சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார். | ஏசா 10:33 ஏசா 14:24 ஏசா 14:27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 47:6 எரே 47:7 எரே 51:62 அப் 4:28 எபே 1:11 எபே 3:11 |
| 10 | தர்ஷீஸின் குமாரத்தியே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை. | ஏசா 23:14 1சாமு 28:20 யோபு 12:21 புலம் 1:6 ஆகா 2:22 ரோம 5:6 |
| 11 | கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து: | ஏசா 2:19 ஏசா 14:16 ஏசா 14:17 யாத் 15:8-10 சங் 46:6 எசே 26:10 எசே 26:15-19 எசே 27:34 எசே 27:35 எசே 31:16 ஆகா 2:7 |
| 12 | ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார். | ஏசா 23:1 ஏசா 23:7 எசே 26:13 எசே 26:14 வெளிப் 18:22 |
| 13 | கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார். | ஏசா 13:19 ஆதி 11:28 ஆதி 11:31 யோபு 1:17 ஆபகூ 1:6 அப் 7:4 |
| 14 | தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது. | ஏசா 23:1 ஏசா 23:6 எசே 27:25-30 வெளிப் 18:11-19 |
| 15 | அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும். | எரே 25:9-11 எரே 25:22-11 எரே 27:3-7 எரே 29:10 எசே 29:11 |
| 16 | மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு. | நீதி 7:10-12 எரே 30:14 |
| 17 | எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம்பண்ணும். | எரே 29:10 செப் 2:7 அப் 15:14 |
| 18 | அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும். | ஏசா 60:6 ஏசா 60:7 2நாளா 2:7-9 2நாளா 2:11-16 சங் 45:12 சங் 72:10 சகரி 14:20 சகரி 14:21 மாற் 3:8 அப் 21:3-5 |