| 1 | நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்., | பிரச 11:10 ஆதி 39:2 ஆதி 39:8 ஆதி 39:9 ஆதி 39:23 1சாமு 1:28 1சாமு 2:18 1சாமு 2:26 1சாமு 3:19-21 1சாமு 16:7 1சாமு 16:12 1சாமு 16:13 1சாமு 17:36 1சாமு 17:37 1இரா 3:6-12 1இரா 14:13 1இரா 18:12 2நாளா 34:2 2நாளா 34:3 சங் 22:9 சங் 22:10 சங் 34:11 சங் 71:17 சங் 71:18 நீதி 8:17 நீதி 22:6 ஏசா 26:8 புலம் 3:27 தானி 1:8 தானி 1:9 தானி 1:17 லூக் 1:15 லூக் 2:40-52 லூக் 18:16 எபே 6:4 2தீமோ 3:15 |
| 2 | சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும், | பிரச 11:7 பிரச 11:8 ஆதி 27:1 ஆதி 48:10 1சாமு 3:2 1சாமு 4:15 1சாமு 4:18 |
| 3 | மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், | 2சாமு 21:15-17 சங் 90:9 சங் 90:10 சங் 102:23 சகரி 8:4 |
| 4 | ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், | 2சாமு 19:35 |
| 5 | மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம், பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீவனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், | ஆதி 42:38 ஆதி 44:29 ஆதி 44:31 லேவி 19:32 யோபு 15:10 சங் 71:18 நீதி 16:31 நீதி 20:29 ஏசா 46:4 எரே 1:11 |
| 6 | வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால்உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, |
| 7 | இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. | பிரச 3:20 ஆதி 3:19 ஆதி 18:27 யோபு 4:19 யோபு 4:20 யோபு 7:21 யோபு 20:11 யோபு 34:14 யோபு 34:15 சங் 90:3 சங் 146:4 தானி 12:2 |
| 8 | மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். | பிரச 1:2 பிரச 1:14 பிரச 2:17 பிரச 4:4 பிரச 6:12 பிரச 8:8 சங் 62:9 |
| 9 | மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். | 1இரா 8:12-21 1இரா 10:8 |
| 10 | இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். | பிரச 1:1 பிரச 1:12 |
| 11 | ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. | எரே 23:29 மத் 3:7 அப் 2:37 2கொரி 10:4 எபிரெ 4:12 |
| 12 | என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. | லூக் 16:29-31 யோவா 5:39 யோவா 20:31 யோவா 21:25 2பேது 1:19-21 |
| 13 | காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. | பிரச 5:7 பிரச 8:12 ஆதி 22:12 உபா 6:2 உபா 10:12 சங் 111:10 சங் 112:1 சங் 145:19 சங் 147:11 நீதி 1:7 நீதி 23:17 1பேது 2:17 வெளிப் 19:5 |
| 14 | ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். | பிரச 11:9 சங் 96:13 மத் 12:36 மத் 25:31-46 லூக் 12:1 லூக் 12:2 யோவா 5:29 அப் 17:30 அப் 17:31 ரோம 2:16 ரோம 14:10-12 1கொரி 4:5 2கொரி 5:10 வெளிப் 20:11-15 |