| 1 | ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, | மத் 16:18 1கொரி 3:9-15 எபே 2:20-22 1தீமோ 3:15 எபிரெ 3:3-6 1பேது 2:5 1பேது 2:6 |
| 2 | தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி, | ஏசா 25:6 மத் 22:3 மத் 22:4-14 1கொரி 5:7 1கொரி 5:8 |
| 3 | தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, | மத் 22:3 மத் 22:4 மத் 22:9 லூக் 11:49 லூக் 14:17 லூக் 14:21-23 ரோம 10:15 2கொரி 5:20 2கொரி 5:21 |
| 4 | புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். | நீதி 9:16 நீதி 1:22 நீதி 6:32 நீதி 8:5 சங் 19:7 சங் 119:130 மத் 11:25 வெளிப் 3:17 வெளிப் 3:18 வெளிப் 22:17 |
| 5 | நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். | நீதி 9:2 நீதி 9:17 சங் 22:26 சங் 22:29 உன்ன 5:1 ஏசா 55:1-3 எரே 31:12-14 மத் 26:26-28 யோவா 6:27 யோவா 6:49-58 |
| 6 | பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. | நீதி 4:14 நீதி 4:15 நீதி 13:20 சங் 26:4-6 சங் 45:10 சங் 119:115 அப் 2:40 2கொரி 6:17 வெளிப் 18:4 |
| 7 | பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். | நீதி 15:12 ஆதி 19:8 ஆதி 19:9 1இரா 18:17 1இரா 21:20 1இரா 22:24 1இரா 22:27 2நாளா 24:20-22 2நாளா 25:15 2நாளா 25:16 2நாளா 36:16 |
| 8 | பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். | நீதி 23:9 நீதி 29:1 எண் 14:6-10 1இரா 22:8 மத் 7:6 மத் 15:14 எபிரெ 6:4-8 |
| 9 | ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். | நீதி 1:5 நீதி 25:12 ஓசி 6:3 மத் 13:11 மத் 13:12 2பேது 3:18 1யோவா 2:20 1யோவா 2:21 1யோவா 5:13 |
| 10 | கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. | நீதி 1:7 யோபு 28:28 சங் 111:10 பிரச 12:13 |
| 11 | என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். | நீதி 3:2 நீதி 3:16 நீதி 10:27 உபா 6:2 |
| 12 | நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. | நீதி 16:26 யோபு 22:2 யோபு 22:3 யோபு 22:21 யோபு 35:6 யோபு 35:7 ஏசா 28:22 எசே 18:20 2பேது 3:3 2பேது 3:4 2பேது 3:16 |
| 13 | மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். | நீதி 7:11 நீதி 21:9 நீதி 21:19 1தீமோ 6:4 |
| 14 | அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து, | நீதி 7:10-12 |
| 15 | தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: | நீதி 7:13-15 நீதி 7:25-27 நீதி 23:27 நீதி 23:28 |
| 16 | எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், |
| 17 | மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். | நீதி 20:17 நீதி 23:31 நீதி 23:32 ஆதி 3:6 ரோம 7:8 யாக் 1:14 யாக் 1:15 |
| 18 | ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். | நீதி 1:7 சங் 82:5 2பேது 3:5 |