| 1 | ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? | நீதி 1:20 நீதி 1:21 நீதி 9:1-3 ஏசா 49:1-6 ஏசா 55:1-3 மத் 3:3 மத் 4:17 மத் 28:19 மத் 28:20 மாற் 13:10 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:47 யோவா 7:37 அப் 1:8 அப் 22:21 ரோம 15:18-21 |
| 2 | அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. |
| 3 | அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: | மத் 22:9 லூக் 14:21-23 யோவா 18:20 அப் 5:20 |
| 4 | மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். | சங் 49:1-3 சங் 50:1 மத் 11:15 யோவா 3:16 2கொரி 5:19 2கொரி 5:20 கொலோ 1:23 கொலோ 1:28 1தீமோ 2:4-6 தீத் 2:11 தீத் 2:12 வெளிப் 22:17 |
| 5 | பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். | நீதி 1:22 நீதி 9:4 சங் 19:7 சங் 94:8 ஏசா 42:13 ஏசா 55:1-3 அப் 26:18 1கொரி 1:28 1கொரி 6:9-11 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 6 | கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். | நீதி 2:6 நீதி 2:7 நீதி 4:2 நீதி 4:20-22 நீதி 22:20 நீதி 22:21 சங் 19:7-11 சங் 49:3 1கொரி 2:6 1கொரி 2:7 கொலோ 1:26 |
| 7 | என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. | யோபு 36:4 யோவா 1:17 யோவா 8:14 யோவா 8:45 யோவா 8:46 யோவா 14:6 யோவா 17:17 யோவா 18:37 வெளிப் 3:14 |
| 8 | என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. | சங் 12:6 ஏசா 45:23 ஏசா 63:1 |
| 9 | அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். | நீதி 14:6 நீதி 15:14 நீதி 15:24 நீதி 17:24 நீதி 18:1 நீதி 18:2 நீதி 18:15 சங் 19:7 சங் 19:8 சங் 25:12-14 சங் 119:98-100 ஏசா 35:8 மீகா 2:7 மத் 13:11 மத் 13:12 யோவா 6:45 யோவா 7:17 1கொரி 2:14 1கொரி 2:15 யாக் 1:5 |
| 10 | வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். | நீதி 2:4 நீதி 2:5 நீதி 3:13 நீதி 3:14 நீதி 10:20 நீதி 16:16 நீதி 23:23 சங் 119:72 சங் 119:127 சங் 119:162 பிரச 7:11 அப் 3:6 2கொரி 6:10 |
| 11 | முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல. | நீதி 3:14 நீதி 4:5-7 நீதி 16:16 நீதி 20:15 யோபு 28:15-19 சங் 19:10 சங் 119:127 மத் 16:26 பிலிப் 3:8 பிலிப் 3:9 |
| 12 | ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். | சங் 104:24 ஏசா 55:8 ஏசா 55:9 ரோம 11:33 எபே 1:8 எபே 1:11 எபே 3:10 கொலோ 2:3 |
| 13 | தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். | நீதி 16:6 சங் 97:10 சங் 101:3 சங் 119:104 சங் 119:128 ஆமோ 5:15 ரோம 12:9 1தெச 5:22 2தீமோ 2:19 |
| 14 | ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. | ஏசா 9:6 ஏசா 40:14 யோவா 1:9 ரோம 11:33 ரோம 11:34 1கொரி 1:24 1கொரி 1:30 கொலோ 2:3 |
| 15 | என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். | 1சாமு 9:17 1சாமு 16:1 1நாளா 28:5 எரே 27:5-7 தானி 2:21 தானி 4:25 தானி 4:32 தானி 5:18-31 தானி 7:13 தானி 7:14 மத் 28:18 ரோம 13:1 வெளிப் 19:16 |
| 16 | என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். |
| 17 | என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். | 1சாமு 2:30 சங் 91:14 யோவா 14:21 யோவா 14:23 யோவா 16:27 1யோவா 4:19 |
| 18 | ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. | நீதி 3:16 நீதி 4:7-9 யாக் 2:5 |
| 19 | பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. | நீதி 8:10 நீதி 3:14 பிரச 7:12 |
| 20 | என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், | நீதி 3:6 நீதி 4:11 நீதி 4:12 நீதி 6:22 சங் 23:3 சங் 25:4 சங் 25:5 சங் 32:8 ஏசா 2:3 ஏசா 49:10 ஏசா 55:4 யோவா 10:3 யோவா 10:27 யோவா 10:28 வெளிப் 7:17 |
| 21 | அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். | நீதி 8:18 நீதி 1:13 நீதி 6:31 ஆதி 15:14 1சாமு 2:8 மத் 25:46 யோவா 1:1-18 ரோம 8:17 எபிரெ 10:34 1பேது 1:4 |
| 22 | கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார். | நீதி 3:19 யோவா 1:1 யோவா 1:2 கொலோ 1:17 |
| 23 | பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். | ஆதி 1:26 சங் 2:6 மீகா 5:2 யோவா 17:24 எபே 1:10 எபே 1:11 1யோவா 1:1 1யோவா 1:2 |
| 24 | ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். | சங் 2:7 யோவா 1:14 யோவா 3:16 யோவா 5:20 எபிரெ 1:5 1யோவா 4:9 |
| 25 | மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், | யோபு 15:7 யோபு 15:8 யோபு 38:4-11 சங் 90:2 சங் 102:25-28 எபிரெ 1:10 |
| 26 | அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். | ஆதி 1:1-31 |
| 27 | அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், | சங் 33:6 சங் 103:19 சங் 136:5 எரே 10:12 கொலோ 1:16 எபிரெ 1:2 |
| 28 | உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், |
| 29 | சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், | ஆதி 1:9 ஆதி 1:10 யோபு 38:8-11 சங் 33:7 சங் 104:9 எரே 5:22 |
| 30 | நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். | யோவா 1:1-3 யோவா 1:18-3 யோவா 16:28 |
| 31 | அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். | சங் 16:3 சங் 40:6-8 யோவா 4:34 யோவா 13:1 2கொரி 8:9 |
| 32 | ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். | சங் 1:1-4 சங் 119:1 சங் 119:2 சங் 128:1 லூக் 11:28 |
| 33 | நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். | நீதி 1:2 நீதி 1:3 நீதி 1:8 நீதி 4:1 நீதி 5:1 ஏசா 55:1-3 ரோம 10:16 ரோம 10:17 |
| 34 | என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். | நீதி 1:21 நீதி 2:3 நீதி 2:4 சங் 27:4 சங் 84:10 சங் 92:13 மத் 7:24 லூக் 1:6 லூக் 10:39 லூக் 11:28 யோவா 8:31 யோவா 8:32 அப் 2:42 அப் 17:11 அப் 17:12 யாக் 1:22-25 |
| 35 | என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். | நீதி 1:33 நீதி 3:13-18 யோவா 3:16 யோவா 3:36 யோவா 14:6 பிலிப் 3:8 கொலோ 3:3 1யோவா 5:11 1யோவா 5:12 |
| 36 | எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது. | நீதி 1:31 நீதி 20:2 யோவா 3:19 யோவா 3:20 அப் 13:46 எபிரெ 2:3 எபிரெ 10:29 |