| 1 | என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. | நீதி 1:8 நீதி 3:1 |
| 2 | என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். | நீதி 4:13 லேவி 18:5 ஏசா 55:3 யோவா 12:49 யோவா 12:50 யோவா 14:21 யோவா 15:14 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 5:1-3 வெளிப் 22:14 |
| 3 | அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள். | நீதி 3:3 நீதி 6:21 உபா 6:8 உபா 6:9 உபா 11:18-20 ஏசா 30:8 எரே 17:1 எரே 31:33 2கொரி 3:3 |
| 4 | இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, | நீதி 2:2-4 நீதி 4:6-8 |
| 5 | ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. | நீதி 2:16 நீதி 5:3 நீதி 6:24 |
| 6 | நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது, | ஆதி 26:8 2சாமு 6:16 |
| 7 | பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன். | நீதி 1:4 நீதி 1:22 நீதி 1:32 நீதி 8:5 நீதி 14:15 நீதி 14:18 நீதி 19:25 நீதி 22:3 நீதி 27:12 சங் 19:7 சங் 119:130 ரோம 16:18 ரோம 16:19 |
| 8 | அவன் மாலைமயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும். | நீதி 4:14 நீதி 4:15 நீதி 5:8 நியா 16:1 2சாமு 11:2 2சாமு 11:3 1கொரி 6:18 2தீமோ 2:22 யூதா 1:23 |
| 9 | அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான். | ஆதி 39:11 யோபு 24:13-15 ரோம 13:12-14 எபே 5:11 |
| 10 | அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். | ஆதி 38:14 ஆதி 38:15 2இரா 9:22 2இரா 9:30 ஏசா 3:16-24 ஏசா 23:16 எரே 4:30 1தீமோ 2:9 வெளிப் 17:3-5 |
| 11 | அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. | நீதி 9:13 நீதி 25:24 நீதி 27:14 நீதி 27:15 நீதி 31:10-31 |
| 12 | சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். | நீதி 9:14 நீதி 23:28 எரே 2:20 எரே 2:33 எரே 2:36 எரே 3:2 எசே 16:24 எசே 16:25 எசே 16:31 வெளிப் 18:3 வெளிப் 18:23 |
| 13 | அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து: | ஆதி 39:7 ஆதி 39:12 எண் 25:1 எண் 25:6-8 எண் 31:16 எசே 16:33 வெளிப் 2:20 |
| 14 | சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். | நீதி 15:8 நீதி 17:1 நீதி 21:27 லேவி 7:15 உபா 12:6 உபா 12:7 |
| 15 | ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். |
| 16 | என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். | உன்ன 1:16 உன்ன 3:7-10 வெளிப் 2:22 |
| 17 | என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். | உன்ன 3:6 ஏசா 57:7-9 |
| 18 | வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். |
| 19 | புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான். | மத் 20:11 மத் 24:43 லூக் 12:39 |
| 20 | பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, | 2நாளா 2:4 |
| 21 | தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். | நீதி 7:5 நீதி 5:3 நியா 16:15-17 சங் 12:2 |
| 22 | உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலும், | அப் 14:13 |
| 23 | ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது. | எண் 25:8 எண் 25:9 |
| 24 | ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். | நீதி 4:1 நீதி 5:7 நீதி 8:32 நீதி 8:33 1கொரி 4:14 1கொரி 4:15 கலா 4:19 1யோவா 2:1 |
| 25 | உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. | நீதி 4:14 நீதி 4:15 நீதி 5:8 நீதி 6:25 நீதி 23:31-33 மத் 5:28 |
| 26 | அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். | நீதி 6:33 நியா 16:21 2சாமு 3:6-8 2சாமு 3:27-8 2சாமு 12:9-11 1இரா 11:1 1இரா 11:2 நெகே 13:26 1கொரி 10:8 2கொரி 12:21 1பேது 2:11 |
| 27 | அவள் வீடு பாதாளத்துக்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். | நீதி 2:18 நீதி 2:19 நீதி 5:5 நீதி 9:18 பிரச 7:26 |