| 1 | என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், | நீதி 11:15 நீதி 17:18 நீதி 20:16 நீதி 22:26 நீதி 27:13 ஆதி 43:9 ஆதி 44:32 ஆதி 44:33 யோபு 17:3 பிலேமோ 1:18 பிலேமோ 1:19 எபிரெ 7:22 |
| 2 | நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். | நீதி 12:13 நீதி 18:7 |
| 3 | இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். | 2சாமு 24:14 2நாளா 12:5 சங் 31:8 |
| 4 | உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். | நீதி 6:10 நீதி 6:11 சங் 132:4 பிரச 9:10 மத் 24:17 மத் 24:18 மாற் 13:35 மாற் 13:36 |
| 5 | வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். | நீதி 1:17 சங் 11:1 சங் 124:7 |
| 6 | சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். | நீதி 1:17 யோபு 12:7 யோபு 12:8 ஏசா 1:3 மத் 6:26 |
| 7 | அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், | யோபு 38:39-41 யோபு 39:1-12 யோபு 39:26-30 யோபு 41:4-34 |
| 8 | கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். | நீதி 30:25 1தீமோ 6:19 |
| 9 | சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? | நீதி 1:22 நீதி 24:33 நீதி 24:34 எரே 4:14 |
| 10 | இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? | நீதி 6:6 நீதி 23:33 நீதி 23:34 நீதி 24:33 நீதி 24:34 |
| 11 | உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும். | நீதி 10:4 நீதி 13:4 நீதி 20:4 |
| 12 | பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். | நீதி 11:6 நீதி 17:4 1சாமு 17:28 எரே 24:2 எரே 24:8-10 யாக் 1:21 |
| 13 | அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான். | நீதி 5:6 நீதி 10:10 யோபு 15:12 சங் 35:19 |
| 14 | அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். | நீதி 2:14 நீதி 16:28-30 நீதி 21:8 |
| 15 | ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். | நீதி 1:27 நீதி 29:1 சங் 73:18-20 ஏசா 30:13 1தெச 5:3 |
| 16 | ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். | நீதி 8:13 நீதி 30:18 நீதி 30:21 நீதி 30:24 நீதி 30:29 ஆமோ 1:3 ஆமோ 1:6 ஆமோ 1:9 ஆமோ 1:11 ஆமோ 2:1 ஆமோ 2:4 ஆமோ 2:6 |
| 17 | அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, | நீதி 30:13 சங் 10:4 சங் 18:27 சங் 73:6-8 சங் 101:5 சங் 131:1 ஏசா 2:11 ஏசா 3:9 ஏசா 3:16 1பேது 5:5 |
| 18 | துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், | நீதி 24:8 ஆதி 6:5 சங் 36:4 எரே 4:14 மீகா 2:1 சகரி 8:17 |
| 19 | அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. | நீதி 12:17 நீதி 19:5 நீதி 19:9 நீதி 25:18 யாத் 20:16 யாத் 23:1 உபா 19:16-20 1இரா 21:10-15 சங் 27:12 சங் 35:11 மத் 15:19 மத் 26:59 அப் 6:13 |
| 20 | என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. | நீதி 1:8 நீதி 1:9 நீதி 7:1-4 நீதி 23:22 நீதி 30:11 உபா 21:18 உபா 27:16 எபே 6:1 |
| 21 | அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். | நீதி 3:3 நீதி 4:6 நீதி 4:21 நீதி 7:3 நீதி 7:4 யாத் 13:16 உபா 6:8 2கொரி 3:3 |
| 22 | நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். | நீதி 2:11 நீதி 3:23 நீதி 3:24 சங் 17:4 சங் 43:3 சங் 119:9 சங் 119:11 சங் 119:24 சங் 119:54 சங் 119:97 சங் 119:148 தானி 11:18-21 |
| 23 | கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. | சங் 19:8 சங் 119:98-100 சங் 119:105-100 ஏசா 8:20 2பேது 1:19 |
| 24 | அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும். | நீதி 2:16 நீதி 5:3 நீதி 7:5 பிரச 7:26 |
| 25 | உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. | 2சாமு 11:2-5 மத் 5:28 யாக் 1:14 யாக் 1:15 |
| 26 | வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். | நீதி 5:10 நீதி 29:3 நீதி 29:8 லூக் 15:13-15 லூக் 15:30-15 |
| 27 | தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? | யோபு 31:9-12 ஓசி 7:4-7 யாக் 3:5 |
| 28 | தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? |
| 29 | பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான். | ஆதி 12:18 ஆதி 12:19 லேவி 20:10 2சாமு 11:3 2சாமு 11:4 2சாமு 12:9 2சாமு 12:10 2சாமு 16:21 எரே 5:8 எரே 5:9 எசே 22:11 மல்கி 3:5 |
| 30 | திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்; |
| 31 | அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். | யாத் 22:1 யாத் 22:3 யாத் 22:4 2சாமு 12:6 யோபு 20:18 லூக் 19:8 |
| 32 | ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். | நீதி 7:7 ஆதி 39:9 ஆதி 39:10 ஆதி 41:39 பிரச 7:25 பிரச 7:26 எரே 5:8 எரே 5:21 ரோம 1:22-24 |
| 33 | வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது. | நீதி 5:9-11 நியா 16:19-21 சங் 38:1-8 சங் 51:8 |
| 34 | ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். | நீதி 27:4 எண் 5:14 எண் 25:11 நியா 19:29 நியா 19:30 உன்ன 8:6 1கொரி 10:22 |
| 35 | அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான். | நீதி 4:3 நீதி 7:13 நீதி 8:25 2இரா 5:1 ஏசா 2:9 மல்கி 2:9 |