இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.நீதி 1:1 நீதி 25:1 1இரா 4:32 பிரச 12:9
2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.நீதி 11:4 சங் 49:6-10 ஏசா 10:2 ஏசா 10:3 செப் 1:18 லூக் 12:15-21 லூக் 16:22 லூக் 16:23 ரோம 2:5 யாக் 5:1-3
3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.யோபு 5:20 சங் 10:14 சங் 33:19 சங் 34:9 சங் 34:10 சங் 37:3 சங் 37:19 சங் 37:25 ஏசா 33:16 மத் 6:30-33 லூக் 12:22-24 லூக் 12:31-24 எபிரெ 13:5 எபிரெ 13:6
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.நீதி 6:6-11 நீதி 11:24 நீதி 12:24 நீதி 19:15 நீதி 19:24 நீதி 20:4 நீதி 20:13 நீதி 24:30-34 பிரச 10:18 யோவா 6:27 எபிரெ 6:11 எபிரெ 6:12 2பேது 1:5-10
5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புகாலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.நீதி 6:6 நீதி 6:8 நீதி 30:25 ஏசா 55:6 ஏசா 55:7
6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.நீதி 11:26 நீதி 24:25 நீதி 28:20 உபா 28:2 யோபு 29:13 2தீமோ 1:16-18
7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.1இரா 11:36 2இரா 19:34 2நாளா 24:16 சங் 112:6 மாற் 14:9 லூக் 1:48
8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.நீதி 1:5 நீதி 9:9 நீதி 12:1 நீதி 14:8 சங் 119:34 யாக் 3:13
9உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.நீதி 28:18 சங் 23:4 சங் 25:21 சங் 26:11 சங் 26:12 சங் 84:11 ஏசா 33:15 ஏசா 33:16 கலா 2:13 கலா 2:14
10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.நீதி 6:13 யோபு 15:12 சங் 35:19
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.நீதி 10:20 நீதி 10:21 நீதி 10:32 நீதி 13:14 நீதி 15:7 நீதி 16:22-24 நீதி 18:4 நீதி 20:15 சங் 37:30 சங் 37:31 எபே 4:29
12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.நீதி 15:18 நீதி 16:27 நீதி 28:25 நீதி 29:22 யாக் 4:1
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.நீதி 10:11 நீதி 10:21 நீதி 15:7 நீதி 15:23 நீதி 20:15 நீதி 26:3 யாத் 10:12 ஏசா 50:4 லூக் 4:22
14ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.நீதி 1:5 நீதி 9:9 நீதி 18:1 நீதி 18:15 நீதி 19:8 மத் 12:35 மத் 13:44 மத் 13:52 2கொரி 4:6 2கொரி 4:7
15ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.நீதி 18:11 யோபு 31:24 யோபு 31:25 சங் 49:6 சங் 52:7 பிரச 7:12 எரே 9:23 மாற் 10:24 லூக் 12:19 1தீமோ 6:17
16நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.நீதி 11:30 ஏசா 3:10 ஏசா 3:11 யோவா 6:27 1கொரி 15:58 கலா 6:7-9 எபிரெ 6:10
17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.நீதி 3:1 நீதி 3:2 நீதி 3:18 நீதி 4:4 நீதி 4:13 நீதி 12:1 நீதி 22:17-19 மத் 7:24-27 லூக் 11:28 எபிரெ 2:1 2பேது 1:5-11
18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.நீதி 26:24-26 1சாமு 18:21 1சாமு 18:22 1சாமு 18:29 2சாமு 3:27 2சாமு 11:8-15 2சாமு 13:23-29 2சாமு 20:9 2சாமு 20:10 சங் 5:9 சங் 12:2 சங் 55:21 லூக் 20:20 லூக் 20:21
19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.பிரச 5:3 பிரச 10:13 பிரச 10:14 யாக் 3:2
20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.நீதி 12:18 நீதி 15:4 நீதி 16:13 நீதி 25:11 நீதி 25:12 மத் 12:35
21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.நீதி 12:18 நீதி 15:4 யோபு 4:3 யோபு 4:4 யோபு 23:12 யோபு 29:21 யோபு 29:22 சங் 37:30 பிரச 12:9 பிரச 12:10 எரே 3:15 எரே 15:16 யோவா 21:15-17 1பேது 5:2
22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.ஆதி 12:2 ஆதி 13:2 ஆதி 14:23 ஆதி 24:35 ஆதி 26:12 உபா 8:17 உபா 8:18 1சாமு 2:7 1சாமு 2:8 சங் 37:22 சங் 107:38 சங் 113:7 சங் 113:8
23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.நீதி 14:9 நீதி 15:21 நீதி 26:18 நீதி 26:19 பிரச 11:9
24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.யோபு 3:25 யோபு 15:21 எபிரெ 10:27
25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்;நீதி 1:27 யோபு 27:19-21 சங் 37:9 சங் 37:10 சங் 58:9 சங் 73:18-20 ஏசா 40:24
26பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.நீதி 25:13 நீதி 25:20
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போகும்.நீதி 3:2 நீதி 3:16 நீதி 9:11 சங் 21:4 சங் 34:11-13 சங் 91:16
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.சங் 16:9 சங் 73:24-26 ரோம 5:2 ரோம 12:12 ரோம 15:13 2தெச 2:16
29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.சங் 84:7 ஏசா 40:31 சகரி 10:12 பிலிப் 4:13
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.நீதி 10:25 சங் 16:8 சங் 37:22 சங் 37:28 சங் 37:29 சங் 112:6 சங் 125:1 ரோம 8:35-39 2பேது 1:10 2பேது 1:11
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.நீதி 10:11 நீதி 10:13 நீதி 10:20 நீதி 10:21 சங் 37:30
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.பிரச 12:10 தானி 4:27 தீத் 2:8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.