இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.நீதி 16:11 நீதி 20:10 நீதி 20:23 லேவி 19:35 லேவி 19:36 உபா 25:13-16 ஓசி 12:7 ஆமோ 8:5 ஆமோ 8:6 மீகா 6:10 மீகா 6:11
2அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.நீதி 3:34 நீதி 3:35 நீதி 16:18 நீதி 16:19 தானி 4:30-32 லூக் 14:8-11 லூக் 18:14
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.நீதி 11:5 நீதி 13:6 சங் 25:21 சங் 26:1 யோவா 7:17
4கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.நீதி 10:2 யோபு 36:18 யோபு 36:19 சங் 49:6-8 எசே 7:19 செப் 1:18 மத் 16:26 லூக் 12:20
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.நீதி 11:3 நீதி 1:31 நீதி 1:32 நீதி 5:22 2சாமு 17:23 எஸ்தர் 7:3-10 சங் 9:15 சங் 9:16 மத் 27:4 மத் 27:5
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.ஆதி 30:33 ஆதி 31:37 1சாமு 12:3 1சாமு 12:4
7துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும்.நீதி 10:28 நீதி 14:32 யாத் 15:9 யாத் 15:10 யோபு 8:13 யோபு 8:14 யோபு 11:20 சங் 146:4 எசே 28:9 லூக் 12:19 லூக் 12:20
8நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.நீதி 21:18 எஸ்தர் 7:9 எஸ்தர் 7:10 ஏசா 43:3 ஏசா 43:4 தானி 6:23 தானி 6:24
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.1இரா 13:18-22 1இரா 22:6 1இரா 22:20-23 யோபு 8:13 யோபு 34:30 சங் 55:12 சங் 55:20 சங் 55:21 மத் 7:15 மத் 15:5-14 அப் 20:30 2கொரி 11:13-15 2தெச 2:8-10 1தீமோ 4:1-3 2பேது 2:1-3
10நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.நீதி 28:12 நீதி 28:28 எஸ்தர் 8:15 எஸ்தர் 8:16
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.நீதி 14:34 நீதி 29:8 ஆதி 41:38-42 ஆதி 45:8 2நாளா 32:20-22 யோபு 22:30 பிரச 9:15
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.நியா 9:27-29 நியா 9:38-29 நெகே 4:2-4 சங் 123:3 சங் 123:4 லூக் 16:14 லூக் 18:9 யோவா 7:48-52
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.நீதி 20:19 லேவி 19:16
14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.நீதி 15:22 நீதி 16:22 நீதி 24:6 1இரா 12:1-19 ஏசா 19:11-14 அப் 15:6-21
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.நீதி 6:1-5 நீதி 17:18 நீதி 20:16 நீதி 22:26 நீதி 22:27
16நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.நீதி 31:30 நீதி 31:31 1சாமு 25:32 1சாமு 25:33 2சாமு 20:16-22 எஸ்தர் 9:25 மத் 26:13 லூக் 8:3 லூக் 10:42 லூக் 21:2-4 அப் 9:39 அப் 16:14 அப் 16:15 ரோம 16:2-4 ரோம 16:6-4 2யோவா 1:1
17தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.சங் 41:1-4 சங் 112:4-9 ஏசா 32:7 ஏசா 32:8 ஏசா 57:1 ஏசா 58:7-12 தானி 4:27 மத் 5:7 மத் 6:14 மத் 6:15 மத் 25:34-40 லூக் 6:38 2கொரி 9:6-14 பிலிப் 4:17
18துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.நீதி 1:18 நீதி 5:22 யோபு 27:13-23 பிரச 10:8 ஏசா 59:5-8 எபே 4:22
19நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.நீதி 11:4 நீதி 10:16 நீதி 12:28 நீதி 19:23 அப் 10:35 1யோவா 3:7 1யோவா 3:10
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.நீதி 6:14 நீதி 6:16-19 நீதி 8:13 சங் 18:25 சங் 18:26
21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.நீதி 16:5 யாத் 23:2
22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.நீதி 31:30 எசே 16:15-22 நாகூ 3:4-6 1பேது 3:3 1பேது 3:4 2பேது 2:22
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.சங் 10:17 சங் 27:4 சங் 37:4 சங் 39:7 சங் 39:8 சங் 119:5 சங் 119:10 ஏசா 26:9 எரே 17:16 மத் 5:6
24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.நீதி 11:18 நீதி 19:17 நீதி 28:8 உபா 15:10 சங் 112:9 பிரச 11:1 பிரச 11:2 பிரச 11:6 லூக் 6:38 அப் 11:29 அப் 11:30 2கொரி 9:5-11
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.நீதி 28:27 யோபு 29:13-18 யோபு 31:16-20 ஏசா 32:8 ஏசா 58:7-11 மத் 5:7 மத் 25:34 மத் 25:35
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.ஆமோ 8:4-6
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.நீதி 17:11 எஸ்தர் 7:10 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 9:16 சங் 10:2 சங் 57:6
28தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.நீதி 10:15 உபா 8:12-14 யோபு 31:24 யோபு 31:25 சங் 52:7 சங் 62:10 மாற் 10:24 லூக் 12:20 1தீமோ 6:17
29தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.ஆதி 34:30 யோசு 7:24 யோசு 7:25 1சாமு 25:3 1சாமு 25:17 1சாமு 25:38 ஆபகூ 2:9 ஆபகூ 2:10
30நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.நீதி 3:18 நீதி 15:4
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.2சாமு 7:14 2சாமு 7:15 2சாமு 12:9-12 1இரா 13:24 எரே 25:29 1கொரி 11:30-32 1பேது 4:17 1பேது 4:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.