1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.நீதி 2:10 நீதி 2:11 நீதி 8:17 நீதி 8:32 நீதி 18:1 சங் 119:27 சங் 119:97-100 2தெச 2:10 2நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.நீதி 8:35 சங் 112:5 பிரச 8:8 அப் 11:24 ரோம 5:7 3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.நீதி 10:25 யோபு 5:3-5 யோபு 15:29 யோபு 20:5-9 யோபு 27:16-18 4குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.நீதி 14:1 நீதி 19:13 நீதி 19:14 நீதி 31:10-25 1கொரி 11:7 1கொரி 11:11 5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.நீதி 11:23 நீதி 24:9 சங் 119:15 சங் 139:23 ஏசா 55:7 எரே 4:14 6துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.நீதி 1:11-19 2சாமு 17:1-4 ஏசா 59:7 எரே 5:26 மீகா 7:1 மீகா 7:2 அப் 23:12 அப் 23:15 அப் 25:3 7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.நீதி 11:21 நீதி 14:11 நீதி 15:25 எஸ்தர் 9:6-10 எஸ்தர் 9:14-10 யோபு 5:3 யோபு 5:4 யோபு 11:20 யோபு 18:15-20 யோபு 27:18-23 சங் 37:10 சங் 37:35-37 சங் 73:18 சங் 73:19 8தன் புத்திக்குத்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.ஆதி 41:39 1சாமு 16:18 1சாமு 18:30 பிரச 8:1 லூக் 12:42-44 லூக் 16:8 1கொரி 3:10-15 1கொரி 4:5 2கொரி 10:18 9ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.நீதி 13:7 லூக் 14:11 10நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.ஆதி 33:13 ஆதி 33:14 எண் 22:28-32 உபா 25:4 யோவா 4:11 11தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.நீதி 13:23 நீதி 14:4 நீதி 14:23 நீதி 27:27 நீதி 28:19 ஆதி 3:19 சங் 128:2 எபே 4:28 1தெச 4:11 1தெச 4:12 2தெச 3:8 12துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.நீதி 1:17-19 நீதி 29:5 நீதி 29:6 சங் 9:15 சங் 10:9 எரே 5:26-28 மீகா 7:2 ஆபகூ 1:15-17 13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.நீதி 6:2 நீதி 15:2 நீதி 18:6 நீதி 18:7 1இரா 2:23 சங் 5:6 சங் 64:8 தானி 6:24 மத் 27:25 14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.நீதி 13:2 நீதி 18:20 நீதி 18:21 சங் 63:5 15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.நீதி 3:7 நீதி 14:16 நீதி 16:2 நீதி 16:25 நீதி 26:12 நீதி 26:16 நீதி 28:11 நீதி 30:12 லூக் 18:11 கலா 6:3 16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.நீதி 25:28 நீதி 29:11 1சாமு 20:30-34 1இரா 19:1 1இரா 19:2 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.நீதி 14:5 நீதி 14:25 1சாமு 22:14 1சாமு 22:15 18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.நீதி 25:18 சங் 52:2 சங் 57:4 சங் 59:7 சங் 64:3 யாக் 3:6-8 19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்;சகரி 1:4-6 மத் 24:35 20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.நீதி 12:12 நீதி 26:24-26 எரே 17:16 மாற் 7:21 மாற் 7:22 மாற் 12:14-17 ரோம 1:29 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.ரோம 8:28 1கொரி 3:22 1கொரி 3:23 2கொரி 4:17 22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.நீதி 6:16 நீதி 6:17 சங் 5:6 ஏசா 9:15 எசே 13:19 எசே 13:22 வெளிப் 21:8 வெளிப் 22:15 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.நீதி 10:19 நீதி 11:13 நீதி 13:16 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.நீதி 10:4 நீதி 13:4 நீதி 17:2 நீதி 22:29 1இரா 11:28 1இரா 12:20 25மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.நீதி 14:10 நீதி 15:13 நீதி 15:15 நீதி 15:23 நீதி 17:22 நீதி 18:14 நெகே 2:1 நெகே 2:2 சங் 38:6 சங் 42:11 மாற் 14:33 மாற் 14:34 26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.நீதி 12:13 நீதி 17:27 சங் 16:3 மத் 5:46-48 லூக் 6:32-36 1பேது 2:18-21 27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.நீதி 13:4 நீதி 23:2 நீதி 26:15 28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.நீதி 8:35 நீதி 9:11 நீதி 10:16 நீதி 11:19 எசே 18:9 எசே 18:20-24 ரோம 5:21 ரோம 6:22 ரோம 6:23 தீத் 2:11 தீத் 2:12 1யோவா 2:29 1யோவா 3:7 3யோவா 1:11