| 1 | யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: | நீதி 31:1 2பேது 1:19-21 |
| 2 | மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. | யோபு 42:3-6 சங் 73:22 ஏசா 6:5 ரோம 11:25 1கொரி 3:18 1கொரி 8:2 யாக் 1:5 |
| 3 | நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. | ஆமோ 7:14 ஆமோ 7:15 மத் 16:17 |
| 4 | வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? | உபா 30:12 யோவா 3:13 ரோம 10:6 எபே 4:9 எபே 4:10 |
| 5 | தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். | சங் 12:6 சங் 18:30 சங் 19:8 சங் 119:140 ரோம 7:12 யாக் 3:17 |
| 6 | அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். | உபா 4:2 உபா 12:32 வெளிப் 22:18 வெளிப் 22:19 |
| 7 | இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். | 1இரா 3:5-9 2இரா 2:9 சங் 27:4 லூக் 10:42 |
| 8 | மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. | நீதி 21:6 நீதி 22:8 நீதி 23:5 சங் 62:9 சங் 62:10 சங் 119:29 சங் 119:37 பிரச 1:2 ஏசா 5:18 ஏசா 59:4 யோவா 2:8 அப் 14:15 |
| 9 | நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். | உபா 6:10-12 உபா 8:10-14 உபா 31:20 உபா 32:15 நெகே 9:25 நெகே 9:26 யோபு 31:24-28 எரே 2:31 எசே 16:14 எசே 16:15 எசே 16:49 எசே 16:50 தானி 4:17 தானி 4:30 ஓசி 13:6 அப் 12:22 அப் 12:23 |
| 10 | எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். | நீதி 24:23 உபா 23:15 1சாமு 22:9 1சாமு 22:10 1சாமு 24:9 1சாமு 26:19 1சாமு 30:15 2சாமு 16:1-4 2சாமு 19:26 2சாமு 19:27 தானி 3:8-18 தானி 6:13 தானி 6:24 ரோம 14:4 |
| 11 | தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. | நீதி 30:12-14 மத் 3:7 1பேது 2:9 |
| 12 | தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. | நீதி 21:2 நியா 17:5 நியா 17:13 1சாமு 15:13 1சாமு 15:14 யோபு 33:9 சங் 36:2 ஏசா 65:5 எரே 2:22-24 எரே 2:35-24 லூக் 11:39 லூக் 11:40 லூக் 16:15 லூக் 18:11 2தீமோ 3:5 தீத் 1:15 தீத் 1:16 1யோவா 1:8-10 |
| 13 | வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள். | நீதி 6:17 நீதி 21:4 சங் 101:5 சங் 131:1 ஏசா 2:11 ஏசா 3:16 எசே 28:2-5 எசே 28:9-5 தானி 11:36 தானி 11:37 ஆபகூ 2:4 2தெச 2:3 2தெச 2:4 |
| 14 | தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு. | நீதி 12:18 யோபு 29:17 சங் 3:7 சங் 52:2 சங் 57:4 சங் 58:6 தானி 7:5-7 வெளிப் 9:8 |
| 15 | தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு. | ஏசா 57:3 எசே 16:44-46 மத் 23:32 யோவா 8:39 யோவா 8:44 |
| 16 | அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. | நீதி 27:20 ஆபகூ 2:5 |
| 17 | தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும். | நீதி 30:11 நீதி 20:20 நீதி 23:22 ஆதி 9:21-27 லேவி 20:9 உபா 21:18-21 2சாமு 18:9 2சாமு 18:10 2சாமு 18:14-17 |
| 18 | எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. | யோபு 42:3 சங் 139:6 |
| 19 | அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே. | யோபு 39:27 ஏசா 40:31 |
| 20 | அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். | நீதி 7:13-23 எண் 5:11-30 |
| 21 | மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது. |
| 22 | அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும், | நீதி 19:10 நீதி 28:3 பிரச 10:7 ஏசா 3:4 ஏசா 3:5 |
| 23 | பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப் பெண்ணினிமித்தமுமே. | நீதி 19:13 நீதி 21:9 நீதி 21:19 நீதி 27:15 |
| 24 | பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. | யோபு 12:7 |
| 25 | அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், | நீதி 6:6-8 |
| 26 | சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், | லேவி 11:5 சங் 104:18 |
| 27 | ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், | யாத் 10:4-6 யாத் 10:13-15 சங் 105:34 யோவே 1:4 யோவே 1:6 யோவே 1:7 யோவே 2:7-11 யோவே 2:25-11 வெளிப் 9:3-11 |
| 28 | தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. |
| 29 | விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. |
| 30 | அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும், | எண் 23:24 நியா 14:18 |
| 31 | போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே. | நீதி 16:14 நீதி 20:2 தானி 3:15-18 |
| 32 | நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு. | நீதி 26:12 பிரச 8:3 |
| 33 | பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும். | நீதி 15:18 நீதி 16:28 நீதி 17:14 நீதி 26:21 நீதி 28:25 நீதி 29:22 |