இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 29

                   
புத்தகங்களைக் காட்டு
1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.நீதி 1:24-31 1சாமு 2:25 1சாமு 2:34 1இரா 17:1 1இரா 18:18 1இரா 20:42 1இரா 21:20-23 1இரா 22:20-23 1இரா 22:28-23 1இரா 22:34-37 2நாளா 25:16 2நாளா 33:10 2நாளா 36:15-17 எரே 25:3-5 எரே 26:3-5 எரே 35:13-16 சகரி 1:3-6 மத் 26:21-25 யோவா 6:70 யோவா 6:71 யோவா 13:10 யோவா 13:11 யோவா 13:18 யோவா 13:26 அப் 1:18 அப் 1:25
2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.நீதி 11:10 நீதி 28:12 நீதி 28:28 எஸ்தர் 8:15 சங் 72:1-7 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 எரே 23:6 வெளிப் 11:15
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.நீதி 10:1 நீதி 15:20 நீதி 23:15 நீதி 23:24 நீதி 23:25 நீதி 27:11 லூக் 1:13-17
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.நீதி 29:14 நீதி 16:12 நீதி 20:8 1சாமு 13:13 2சாமு 8:15 1இரா 2:12 சங் 89:14 சங் 99:4 ஏசா 9:7 ஏசா 49:8
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.நீதி 7:5 நீதி 7:21 நீதி 20:19 நீதி 26:24 நீதி 26:25 நீதி 26:28 2சாமு 14:17-24 யோபு 17:5 சங் 5:9 சங் 12:2 1தெச 2:5
6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.நீதி 5:22 நீதி 11:5 நீதி 11:6 நீதி 12:13 யோபு 18:7-10 சங் 11:6 ஏசா 8:14 ஏசா 8:15 2தீமோ 2:26
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.யோபு 29:16 யோபு 31:13 யோபு 31:21 சங் 31:7 சங் 41:1 கலா 6:1
8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.நீதி 11:11 ஏசா 28:14-22 மத் 27:39-43 யோவா 9:40 யோவா 9:41 யோவா 11:47-50 1தெச 2:15 1தெச 2:16
9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.நீதி 26:4 பிரச 10:13 மத் 7:6 மத் 11:17-19
10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.ஆதி 4:5-8 1சாமு 20:31-33 1சாமு 22:11-23 1இரா 21:20 1இரா 22:8 2நாளா 18:7 மாற் 6:18 மாற் 6:19 மாற் 6:24-27 யோவா 15:18 யோவா 15:19 1யோவா 3:12 1யோவா 3:13
11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.நீதி 12:16 நீதி 12:23 நீதி 14:33 நியா 16:17 ஆமோ 5:13 மீகா 7:5
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.நீதி 20:8 நீதி 25:23 1சாமு 22:8-23 1சாமு 23:19-23 2சாமு 3:7-11 2சாமு 4:5-12 1இரா 21:11-13 2இரா 10:6 2இரா 10:7 சங் 52:2-4 சங் 101:5-7
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.மத் 9:9 1கொரி 6:10
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.நீதி 29:4 நீதி 16:12 நீதி 20:28 நீதி 25:5 நீதி 28:16 யோபு 29:11-18 சங் 72:2-4 சங் 72:12-14 சங் 82:2 சங் 82:3 சங் 89:2 ஏசா 1:17 ஏசா 11:4 எரே 5:28 எரே 22:16 தானி 4:27
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.நீதி 29:17 நீதி 29:21 நீதி 22:6 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14 எபிரெ 12:10 எபிரெ 12:11
16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.நீதி 29:2
17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.நீதி 29:15 நீதி 13:24 நீதி 19:18 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.1சாமு 3:1 ஓசி 4:6 ஆமோ 8:11 ஆமோ 8:12 மத் 9:36 ரோம 10:13-15
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.நீதி 26:3 நீதி 30:22
20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.நீதி 29:11 பிரச 5:2 யாக் 1:19
21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.நீதி 10:12 நீதி 15:18 நீதி 17:19 நீதி 26:21 நீதி 30:33
23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.நீதி 18:12 2நாளா 32:25 2நாளா 32:26 2நாளா 33:10-12 2நாளா 33:23-12 2நாளா 33:24-12 யோபு 22:29 யோபு 40:12 ஏசா 2:11 ஏசா 2:12 தானி 4:30-37 தானி 5:20 தானி 5:21 லூக் 14:11 லூக் 18:14 அப் 12:23 யாக் 4:6-10 1பேது 5:5
24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.நீதி 1:11-19 சங் 50:18-22 ஏசா 1:23 மாற் 11:17
25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.ஆதி 12:11-13 ஆதி 20:2 ஆதி 20:11 ஆதி 26:7 யாத் 32:22-24 1சாமு 15:24 1சாமு 27:1 1சாமு 27:11 1இரா 19:3 ஏசா 57:11 மத் 10:28 மத் 15:12 மத் 26:69-74 யோவா 3:2 யோவா 9:22 யோவா 12:42 யோவா 19:12 யோவா 19:13 கலா 2:11-13 2தீமோ 4:16 2தீமோ 4:17
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.நீதி 19:6 சங் 20:9
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.நீதி 24:9 சங் 119:115 சங் 139:21 சகரி 11:8 யோவா 7:7 யோவா 15:17-19 யோவா 15:23-19 1யோவா 3:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.