1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.லேவி 26:17 லேவி 26:36 உபா 28:7 உபா 28:25 2இரா 7:6 2இரா 7:7 2இரா 7:15 சங் 53:5 ஏசா 7:2 எரே 20:4 2தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.1இரா 15:25 1இரா 15:28 1இரா 16:8-29 2இரா 15:8-31 2நாளா 36:1-12 ஏசா 3:1-7 ஓசி 13:11 3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.மத் 18:28-30 4வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேத பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.1சாமு 23:19-21 சங் 10:3 சங் 49:18 எரே 5:30 மத் 3:15 அப் 12:22 அப் 24:2-4 ரோம 1:32 1யோவா 4:5 5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.நீதி 15:24 நீதி 24:7 சங் 25:14 சங் 92:6 எரே 4:22 மாற் 4:10-13 யோவா 7:17 1கொரி 2:14 1கொரி 2:15 யாக் 1:5 1யோவா 2:20 1யோவா 2:27 6இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.நீதி 28:18 நீதி 16:8 நீதி 19:1 நீதி 19:22 லூக் 16:19-23 அப் 24:24-27 7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.நீதி 2:1-6 நீதி 3:1-35 8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.நீதி 13:22 யோபு 27:16 யோபு 27:17 பிரச 2:26 9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.நீதி 21:13 ஏசா 1:15 ஏசா 1:16 ஏசா 58:7-11 சகரி 7:11-13 2தீமோ 4:3 2தீமோ 4:4 10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.எண் 31:15 எண் 31:16 1சாமு 26:19 அப் 13:8-10 ரோம 16:17 ரோம 16:18 2கொரி 11:3 2கொரி 11:4 2கொரி 11:13-15 கலா 1:8 கலா 1:9 கலா 2:4 கலா 3:1-4 2பேது 2:18-20 வெளிப் 2:14 11ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.நீதி 18:11 நீதி 23:4 ஏசா 10:13 ஏசா 10:14 எசே 28:3-5 லூக் 16:13 லூக் 16:14 1கொரி 3:18 1கொரி 3:19 1தீமோ 6:17 12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள்.நீதி 28:28 நீதி 11:10 நீதி 29:2 1நாளா 15:25-28 1நாளா 16:7-36 1நாளா 29:20-22 2நாளா 7:10 2நாளா 30:22-27 எஸ்தர் 8:15-17 யோபு 29:11-20 லூக் 19:37 லூக் 19:38 13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.நீதி 10:12 நீதி 17:9 ஆதி 3:12 ஆதி 3:13 ஆதி 4:9 1சாமு 15:13 1சாமு 15:24 யோபு 31:33 சங் 32:3-5 எரே 2:22 எரே 2:23 மத் 23:25-28 14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.நீதி 23:17 சங் 2:11 சங் 16:8 சங் 112:1 ஏசா 66:2 எரே 32:40 ரோம 11:20 எபிரெ 4:1 1பேது 1:17 15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.நீதி 20:2 ஓசி 5:11 1பேது 5:8 16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.1இரா 12:10 1இரா 12:14 நெகே 5:15 பிரச 4:1 ஏசா 3:12 ஆமோ 4:1 17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.ஆதி 9:6 யாத் 21:14 எண் 35:14-34 1இரா 21:19 1இரா 21:23 2இரா 9:26 2நாளா 24:21-25 மத் 27:4 மத் 27:5 அப் 28:4 18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.நீதி 10:9 நீதி 10:25 நீதி 11:3-6 சங் 25:21 சங் 26:11 சங் 84:11 கலா 2:14 19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.நீதி 12:11 நீதி 14:4 நீதி 27:23-27 20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.நீதி 20:6 1சாமு 22:14 நெகே 7:2 சங் 101:6 சங் 112:4-9 லூக் 12:42 லூக் 16:1 லூக் 16:10-12 1கொரி 4:2-5 வெளிப் 2:10 வெளிப் 2:13 21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான்.நீதி 18:5 நீதி 24:23 யாத் 23:2 யாத் 23:8 22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.நீதி 28:20 1தீமோ 6:9 23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.நீதி 27:5 நீதி 27:6 2சாமு 12:7 1இரா 1:23 1இரா 1:32-40 சங் 141:5 மத் 18:15 கலா 2:11 2பேது 3:15 2பேது 3:16 24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.நீதி 19:26 நியா 17:2 மத் 15:4-6 25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.நீதி 10:12 நீதி 13:10 நீதி 15:18 நீதி 21:24 நீதி 22:10 நீதி 29:22 26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.நீதி 3:5 2இரா 8:13 எரே 17:9 மாற் 7:21-23 மாற் 14:27-31 ரோம 8:7 27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.நீதி 19:17 நீதி 22:9 உபா 15:7 உபா 15:10 சங் 41:1-3 சங் 112:5-9 2கொரி 9:6-11 எபிரெ 13:16 28துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.நீதி 28:12 நீதி 29:2