| 1 | ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: | நீதி 30:1 |
| 2 | என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, | ஏசா 49:15 |
| 3 | ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. | நீதி 5:9-11 நீதி 7:26 நீதி 7:27 ஓசி 4:11 |
| 4 | திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. | லேவி 10:9 லேவி 10:10 1இரா 20:12 1இரா 20:16-20 எஸ்தர் 3:15 பிரச 10:17 ஏசா 28:7 ஏசா 28:8 தானி 5:2-4 ஓசி 4:11 ஓசி 4:12 ஓசி 7:3-5 ஆபகூ 2:5 மாற் 6:21-28 |
| 5 | மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். | ஆபகூ 2:5 |
| 6 | மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்; | சங் 104:15 1தீமோ 5:23 |
| 7 | அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும். | எபே 5:18 |
| 8 | ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. | நீதி 24:7 நீதி 24:11 நீதி 24:12 1சாமு 19:4-7 1சாமு 20:32 1சாமு 22:14 1சாமு 22:15 எஸ்தர் 4:13-16 யோபு 29:9 யோபு 29:17 சங் 82:3 சங் 82:4 எரே 26:16-19 எரே 26:24-19 எரே 38:7-10 யோவா 7:51 |
| 9 | உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய். | நீதி 16:12 நீதி 20:8 லேவி 19:15 உபா 1:16 உபா 16:18-20 2சாமு 8:15 சங் 58:1 சங் 58:2 சங் 72:1 சங் 72:2 யோபு 29:12 யோபு 29:15 யோபு 29:16 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 11:4 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 5:28 எரே 22:3 எரே 22:15 எரே 22:16 எரே 23:5 தானி 4:27 ஆமோ 5:11 ஆமோ 5:12 சகரி 7:9 சகரி 9:9 யோவா 7:24 எபிரெ 1:9 வெளிப் 19:11 |
| 10 | குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. | நீதி 12:4 நீதி 18:22 நீதி 19:14 ரூத் 3:11 பிரச 7:28 உன்ன 6:8 உன்ன 6:9 எபே 5:25-33 |
| 11 | அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. | 2இரா 4:9 2இரா 4:10 2இரா 4:22 2இரா 4:23 1பேது 3:1-7 |
| 12 | அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள். | 1சாமு 25:18-22 1சாமு 25:26-22 1சாமு 25:27-22 |
| 13 | ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள். | ஆதி 18:6-8 ஆதி 24:13 ஆதி 24:14 ஆதி 24:18-20 ஆதி 29:9 ஆதி 29:10 யாத் 2:16 ரூத் 2:2 ரூத் 2:3 ரூத் 2:23 ஏசா 3:16-24 ஏசா 32:9-11 அப் 9:39 அப் 9:40 1தெச 4:11 2தெச 3:10-12 1தீமோ 5:10 1தீமோ 5:14 தீத் 2:5 |
| 14 | அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள். | நீதி 31:24 1இரா 9:26-28 2நாளா 9:10 எசே 27:3-36 |
| 15 | இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். | யோசு 3:1 2நாளா 36:15 சங் 119:147 சங் 119:148 பிரச 9:10 மாற் 1:35 ரோம 12:11 |
| 16 | ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள். | யோசு 15:18 உன்ன 8:12 மத் 13:44 |
| 17 | தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள். | 1இரா 18:46 2இரா 4:29 யோபு 38:3 லூக் 12:35 எபே 6:10 எபே 6:14 1பேது 1:13 |
| 18 | தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும். | ஆதி 31:40 சங் 127:2 மத் 25:3-10 1தெச 2:9 2தெச 3:7-9 |
| 19 | தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும். | யாத் 35:25 யாத் 35:26 |
| 20 | சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். | நீதி 1:24 ரோம 10:21 |
| 21 | தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள். | நீதி 25:20 |
| 22 | இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு. | நீதி 7:16 |
| 23 | அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். | நீதி 12:4 |
| 24 | மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். | நீதி 31:13 நீதி 31:19 1இரா 10:28 எசே 27:16 லூக் 16:19 |
| 25 | அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். | யோபு 29:14 யோபு 40:10 சங் 132:9 சங் 132:16 ஏசா 61:10 ரோம 13:14 எபே 4:24 1தீமோ 2:10 1பேது 5:5 1பேது 5:6 |
| 26 | தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. | நீதி 31:8 நீதி 31:9 நியா 13:23 1சாமு 25:24-31 2சாமு 20:16-22 2இரா 22:15-20 எஸ்தர் 4:4 எஸ்தர் 5:8 எஸ்தர் 7:3-6 எஸ்தர் 8:3-6 லூக் 1:38 லூக் 1:42-56 அப் 18:26 எபே 4:29 கொலோ 4:5 |
| 27 | அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். | நீதி 14:1 1தெச 4:11 2தெச 3:6 1தீமோ 5:10 தீத் 2:4 |
| 28 | அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து: | நீதி 31:1 1இரா 2:19 சங் 116:16 2தீமோ 1:5 2தீமோ 3:15-17 |
| 29 | அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். | உன்ன 6:8 உன்ன 6:9 எபே 5:27 |
| 30 | செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். | நீதி 6:25 நீதி 11:22 2சாமு 14:25 எஸ்தர் 1:11 எஸ்தர் 1:12 எசே 16:15 யாக் 1:11 1பேது 1:24 |
| 31 | அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. | நீதி 31:16 நீதி 11:30 சங் 128:2 மத் 7:16 மத் 7:20 ரோம 6:21 ரோம 6:22 பிலிப் 4:17 |