இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 26

                   
புத்தகங்களைக் காட்டு
1உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.1சாமு 12:17 1சாமு 12:18
2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.எண் 23:8 உபா 23:4 உபா 23:5 1சாமு 14:28 1சாமு 14:29 1சாமு 17:43 2சாமு 16:12 நெகே 13:2 சங் 109:28
3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.நீதி 10:13 நீதி 17:10 நீதி 19:25 நீதி 27:22 நியா 8:5-7 சங் 32:9 1கொரி 4:21 2கொரி 10:6 2கொரி 13:2
4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.நீதி 17:14 நியா 12:1-6 2சாமு 19:41-43 1இரா 12:14 1இரா 12:16 2இரா 14:8-10 1பேது 2:21-23 1பேது 3:9 யூதா 1:9
5மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.1இரா 22:24-28 எரே 36:17 எரே 36:18 மத் 15:1-3 மத் 16:1-4 மத் 21:23-27 மத் 22:15-32 லூக் 12:13-21 லூக் 13:23-30 யோவா 8:7 யோவா 9:26-33 தீத் 1:13
6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.நீதி 10:26 நீதி 13:17 நீதி 25:13 எண் 13:31
7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.நீதி 26:9 நீதி 17:7 சங் 50:16-21 சங் 64:8 மத் 7:4 மத் 7:5 லூக் 4:23
8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.நீதி 26:1 நீதி 19:10 நீதி 30:22
9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.நீதி 23:35
10பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.நீதி 11:31 ரோம 2:6
11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.யாத் 8:15 மத் 12:45 2பேது 2:22
12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.நீதி 22:29 நீதி 29:20 மத் 21:31 லூக் 7:44
13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.நீதி 15:19 நீதி 19:15 நீதி 22:13
14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.நீதி 6:9 நீதி 6:10 நீதி 12:24 நீதி 12:27 நீதி 24:33 எபிரெ 6:12
15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.நீதி 19:24
16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.நீதி 26:12 நீதி 12:15 1பேது 3:15
17வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.நீதி 17:11 நீதி 18:6 நீதி 20:3 லூக் 12:14 2தீமோ 2:23 2தீமோ 2:24
18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,நீதி 7:23 நீதி 25:18 ஆதி 49:23
19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.நீதி 10:23 நீதி 14:9 நீதி 15:21 எபே 5:4 2பேது 2:13
20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.நீதி 26:22 நீதி 16:28 நீதி 22:10 யாக் 3:6
21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.நீதி 10:12 நீதி 15:18 நீதி 29:22 நீதி 30:33 2சாமு 20:1 1இரா 12:2 1இரா 12:3 1இரா 12:20 சங் 120:4
22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.நீதி 18:8 நீதி 20:19 எசே 22:9
23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.நீதி 10:18 2சாமு 20:9 2சாமு 20:10 எசே 33:31 லூக் 22:47 லூக் 22:48
24பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.நீதி 11:1 நீதி 12:5 நீதி 12:17 நீதி 12:20 நீதி 14:8
25அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.சங் 12:2 சங் 28:3 எரே 9:2-8 மீகா 7:5
26பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.ஆதி 4:8 1சாமு 18:17 1சாமு 18:21 2சாமு 3:27-30 2சாமு 13:22-28 சங் 55:21-23
27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.நீதி 28:10 எஸ்தர் 7:10 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 10:2 சங் 57:6 பிரச 10:8
28கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.யோவா 8:40 யோவா 8:44-49 யோவா 10:32 யோவா 10:33 யோவா 15:22-24
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.