இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 25

                   
புத்தகங்களைக் காட்டு
1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:நீதி 1:1 நீதி 10:1 1இரா 4:32 பிரச 12:9
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.உபா 29:29 யோபு 11:7 யோபு 11:8 யோபு 38:4-41 யோபு 39:1-30 யோபு 40:2 யோபு 42:3 ரோம 11:33 ரோம 11:34
3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.சங் 103:11 ஏசா 7:11 ஏசா 55:9 ரோம 8:39
4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.நீதி 17:3 ஏசா 1:25-27 மல்கி 3:3 2தீமோ 2:20 2தீமோ 2:21 1பேது 1:7
5ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.நீதி 20:8 1இரா 2:33 1இரா 2:46 எஸ்தர் 7:10 எஸ்தர் 8:11-17 சங் 101:7 சங் 101:8
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.நீதி 25:27 நீதி 27:2
7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.நீதி 16:19 லூக் 14:8-10
8வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.நீதி 17:14 நீதி 18:6 நீதி 30:33 2சாமு 2:14-16 2சாமு 2:26-16 2இரா 14:8-12 லூக் 14:31 லூக் 14:32
9நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.மத் 18:5-17
10மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.சங் 119:39
11ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.நீதி 15:23 நீதி 24:26 பிரச 12:10 ஏசா 50:4
12கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.யோபு 42:11
13கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.நீதி 25:25 நீதி 13:17 நீதி 26:6 பிலிப் 2:25-30
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.நீதி 20:6 1இரா 22:11 லூக் 14:11 லூக் 18:10-14 2கொரி 11:13-18 2கொரி 11:31-18 2பேது 2:15-19 யூதா 1:12 யூதா 1:13 யூதா 1:16
15நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.நீதி 15:1 நீதி 16:14 ஆதி 32:4-21 1சாமு 25:14 1சாமு 25:24-44 பிரச 10:4
16தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.நீதி 24:13 நீதி 24:14 நியா 14:8 நியா 14:9 1சாமு 14:25-27 ஏசா 7:15 ஏசா 7:22
17உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.ஆதி 19:2 ஆதி 19:3 நியா 19:18-21
18பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.நீதி 12:18 சங் 52:2 சங் 55:21 சங் 57:4 சங் 120:3 சங் 120:4 சங் 140:3 எரே 9:3 எரே 9:8 யாக் 3:6
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.2நாளா 28:20 2நாளா 28:21 யோபு 6:14-20 ஏசா 30:1-3 ஏசா 36:6 எசே 29:6 எசே 29:7 2தீமோ 4:16
20மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.உபா 24:12-17 யோபு 24:7-10 ஏசா 58:7 யாக் 2:15 யாக் 2:16
21உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.நீதி 24:17 யாத் 23:4 யாத் 23:5 மத் 5:44 லூக் 10:33-36 ரோம 12:20 ரோம 12:21
22அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.2சாமு 16:12 மத் 10:13 1கொரி 15:18
23வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.யோபு 37:22
24சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.நீதி 19:13 நீதி 21:9 நீதி 21:19 நீதி 27:15 நீதி 27:16
25தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.ஆதி 21:16-19 யாத் 17:2 யாத் 17:3 யாத் 17:6 நியா 15:18 நியா 15:19 2சாமு 23:15 சங் 42:1 சங் 42:2 சங் 63:1 ஏசா 55:1 எரே 18:14 யோவா 7:37 வெளிப் 21:6 வெளிப் 22:17
26துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.ஆதி 4:8 1சாமு 22:14-18 2நாளா 24:21 2நாளா 24:22 மத் 23:34-37 மத் 26:69-74 அப் 7:52 1தெச 2:15 வெளிப் 17:6
27தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.நீதி 27:2 யோவா 5:44 2கொரி 12:1 2கொரி 12:11 பிலிப் 2:3
28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.நீதி 16:32 நீதி 22:24 1சாமு 20:30 1சாமு 25:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.