இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 24

                   
புத்தகங்களைக் காட்டு
1பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.நீதி 24:19 நீதி 3:31 நீதி 23:17 சங் 37:1 சங் 37:7 சங் 73:3 கலா 5:19-21 யாக் 4:5 யாக் 4:6
2அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.நீதி 24:8 நீதி 6:14 1சாமு 23:9 எஸ்தர் 3:6 எஸ்தர் 3:7 யோபு 15:35 சங் 7:14 சங் 10:7 சங் 28:3 சங் 36:4 சங் 64:4-6 சங் 140:2 ஏசா 59:4 மீகா 7:3 மத் 26:3 மத் 26:4 லூக் 23:20 லூக் 23:21 அப் 13:10
3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.நீதி 9:1 நீதி 14:1 1கொரி 3:9
4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.நீதி 15:6 நீதி 20:15 நீதி 21:20 நீதி 27:23-27 1இரா 4:22-28 1நாளா 27:25-31 1நாளா 29:2-9 2நாளா 4:18-22 2நாளா 26:4-11 நெகே 10:39 நெகே 13:5-13 மத் 13:52
5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.நீதி 8:14 நீதி 10:29 நீதி 21:22 பிரச 7:19 பிரச 9:14-18
6நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.நீதி 20:18 லூக் 14:31 1கொரி 9:25-27 எபே 6:10-20 1தீமோ 6:11 1தீமோ 6:12 2தீமோ 4:7
7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.நீதி 14:6 நீதி 15:24 நீதி 17:24 சங் 10:5 சங் 92:5 சங் 92:6 1கொரி 2:14
8தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.நீதி 24:2 நீதி 24:9 நீதி 6:14 நீதி 6:18 நீதி 14:22 1இரா 2:44 சங் 21:11 ஏசா 10:7-13 ஏசா 32:7 எசே 38:10 எசே 38:11 நாகூ 1:11 ரோம 1:30
9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.நீதி 24:8 நீதி 23:7 ஆதி 6:5 ஆதி 8:21 சங் 119:113 ஏசா 55:7 எரே 4:14 மத் 5:28 மத் 9:4 மத் 15:19 அப் 8:22 2கொரி 10:5
10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.1சாமு 27:1 யோபு 4:5 ஏசா 40:28-31 யோவா 4:8 2கொரி 4:1 எபே 3:13 எபிரெ 12:3-5 வெளிப் 2:3 வெளிப் 2:13
11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.1சாமு 26:8 1சாமு 26:9 யோபு 29:17 சங் 82:4 ஏசா 58:6 ஏசா 58:7 லூக் 10:31 லூக் 10:32 லூக் 23:23-25 அப் 18:17 அப் 21:31 அப் 21:32 அப் 23:10 அப் 23:23-35 1யோவா 3:16 1யோவா 3:17
12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?நீதி 5:21 நீதி 21:2 1சாமு 16:7 சங் 7:9 சங் 17:3 சங் 44:21 பிரச 5:8 எரே 17:10 ரோம 2:16 1கொரி 4:5 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:18 வெளிப் 2:23
13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.நீதி 25:16 நீதி 25:27 உன்ன 5:1 ஏசா 7:15 மத் 3:4
14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.நீதி 22:18 சங் 19:10 சங் 19:11 சங் 119:103 சங் 119:111 எரே 15:16
15துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.நீதி 1:11 1சாமு 9:11 1சாமு 22:18 1சாமு 22:19 1சாமு 23:20-23 சங் 10:8-10 சங் 37:32 சங் 56:6 சங் 59:3 சங் 140:5 எரே 11:19 மத் 26:4 அப் 9:24 அப் 23:16 அப் 25:3
16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.யோபு 5:19 சங் 34:19 சங் 37:24 மீகா 7:8-10 2கொரி 1:8-10 2கொரி 4:8-12 2கொரி 11:23-27
17உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.நீதி 17:5 நியா 16:25 2சாமு 16:5-14 யோபு 31:29 சங் 35:15 சங் 35:19 சங் 42:10 ஒபதி 1:12 1கொரி 13:6 1கொரி 13:7
18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.புலம் 4:21 புலம் 4:22 சகரி 1:15 சகரி 1:16
19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.நீதி 13:20 எண் 16:26 சங் 1:1 சங் 26:4 சங் 26:5 சங் 119:115 2கொரி 6:17 எபே 5:11 2தீமோ 3:2-5 வெளிப் 18:4
20துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும்.சங் 9:17 சங் 11:6 ஏசா 3:11
21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.யாத் 14:31 1சாமு 24:6 பிரச 8:2-5 மத் 22:21 ரோம 13:1-7 தீத் 3:1 1பேது 2:13-17
22சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?எண் 16:31-35 1சாமு 31:1-7 2சாமு 18:7 2சாமு 18:8 2நாளா 13:16 2நாளா 13:17 ஓசி 5:11 ஓசி 13:10 ஓசி 13:11
23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.சங் 107:43 பிரச 8:1-5 ஓசி 14:9 யாக் 3:17
24துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.நீதி 17:15 யாத் 23:6 யாத் 23:7 ஏசா 5:20 ஏசா 5:23 எரே 6:13 எரே 6:14 எரே 8:10 எரே 8:11 எசே 13:22
25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.லேவி 19:17 1சாமு 3:13 1இரா 21:19 1இரா 21:20 நெகே 5:7-9 நெகே 13:8-11 நெகே 13:17-11 நெகே 13:25-11 நெகே 13:28-11 யோபு 29:16-18 மத் 14:4 1தீமோ 5:20 2தீமோ 4:2 தீத் 1:13 தீத் 2:15
26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.நீதி 15:23 நீதி 16:1 நீதி 25:11 நீதி 25:12 ஆதி 41:38-57 தானி 2:46-48 மாற் 12:17 மாற் 12:18 மாற் 12:32-34
27வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.1இரா 5:17 1இரா 5:18 1இரா 6:7 லூக் 14:28-30
28நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.நீதி 14:5 நீதி 19:5 நீதி 19:9 நீதி 21:28 யாத் 20:16 யாத் 23:1 1சாமு 22:9 1சாமு 22:10 1இரா 21:9-13 யோபு 2:3 சங் 35:7 சங் 35:11 சங் 52:1 மத் 26:59 மத் 26:60 மத் 27:23 யோவா 15:25
29அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.நீதி 20:22 நீதி 25:21 நீதி 25:22 மத் 5:39-44 ரோம 12:17-21 1தெச 5:15
30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.நீதி 6:6-19 யோபு 4:8 யோபு 5:27 யோபு 15:17 சங் 37:25 சங் 107:42 பிரச 4:1-8 பிரச 7:15 பிரச 8:9-11
31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.ஆதி 3:17-19 யோபு 31:40 எரே 4:3 மத் 13:7 மத் 13:22 எபிரெ 6:8
32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.யோபு 7:17 சங் 4:4 லூக் 2:19 லூக் 2:51
33இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?நீதி 6:4-11 ரோம 13:11 எபே 5:14 1தெச 5:6-8
34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.நீதி 10:4 நீதி 13:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.