| 1 | நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். | ஆதி 43:32-34 யூதா 1:12 |
| 2 | நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. | மத் 18:8 மத் 18:9 1கொரி 9:27 பிலிப் 3:19 |
| 3 | அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. | நீதி 23:6 சங் 141:4 தானி 1:8 லூக் 21:34 எபே 4:22 |
| 4 | ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. | நீதி 28:20 யோவா 6:27 1தீமோ 6:8-10 |
| 5 | இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும். | சங் 119:36 சங் 119:37 எரே 22:17 1யோவா 2:16 |
| 6 | வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. | நீதி 22:9 உபா 15:9 உபா 28:56 மத் 20:15 மாற் 7:22 |
| 7 | அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. | நீதி 19:22 மத் 9:3 மத் 9:4 லூக் 7:39 |
| 8 | நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய். |
| 9 | மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான். | நீதி 9:7 நீதி 9:8 நீதி 26:4 நீதி 26:5 ஏசா 36:21 மத் 7:6 அப் 13:45 அப் 13:46 அப் 28:25-28 |
| 10 | பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. | நீதி 22:28 உபா 19:14 உபா 27:17 யோபு 24:2 |
| 11 | அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். | நீதி 22:23 யாத் 22:22-24 உபா 27:19 சங் 12:5 எரே 50:33 எரே 50:34 எரே 51:36 |
| 12 | உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. | நீதி 23:19 நீதி 2:2-6 நீதி 5:1 நீதி 5:2 நீதி 22:17 எசே 33:31 மத் 13:52 யாக் 1:21-25 |
| 13 | பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். | நீதி 13:24 நீதி 19:18 நீதி 29:15 நீதி 29:17 |
| 14 | நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. | நீதி 22:15 1கொரி 5:5 1கொரி 11:32 |
| 15 | என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். | நீதி 1:10 நீதி 2:1 நீதி 4:1 மத் 9:2 யோவா 21:5 1யோவா 2:1 |
| 16 | உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். | நீதி 8:6 எபே 4:29 எபே 5:4 கொலோ 4:4 யாக் 3:2 |
| 17 | உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. | நீதி 3:31 நீதி 24:1 சங் 37:1-3 சங் 73:3-7 |
| 18 | நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. | சங் 37:37 எரே 29:11 லூக் 16:25 ரோம 6:21 ரோம 6:22 |
| 19 | என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. | நீதி 23:12 நீதி 23:26 நீதி 4:10-23 |
| 20 | மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. | நீதி 23:29-35 நீதி 20:1 நீதி 28:7 நீதி 31:6 நீதி 31:7 ஏசா 5:11 ஏசா 5:22 ஏசா 22:13 மத் 24:49 லூக் 15:13 லூக் 16:19 லூக் 21:34 ரோம 13:13 எபே 5:18 1பேது 4:3 1பேது 4:4 |
| 21 | குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். | நீதி 21:17 உபா 21:20 ஏசா 28:1-3 யோவே 1:5 1கொரி 5:11 1கொரி 6:10 கலா 5:21 பிலிப் 3:19 |
| 22 | உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. | நீதி 1:8 நீதி 6:20 உபா 21:18-21 உபா 27:16 மாற் 7:10 எபே 6:1 எபே 6:2 |
| 23 | சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. | நீதி 2:2-4 நீதி 4:5-7 நீதி 10:1 நீதி 16:16 நீதி 17:16 யோபு 28:12-19 சங் 119:72 சங் 119:127 ஏசா 55:1 மத் 13:44 மத் 13:46 பிலிப் 3:7 பிலிப் 3:8 வெளிப் 3:18 |
| 24 | நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். | நீதி 23:15 நீதி 23:16 நீதி 10:1 நீதி 15:20 1இரா 1:48 1இரா 2:1-3 1இரா 2:9-3 பிரச 2:19 |
| 25 | உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். | நீதி 17:25 1நாளா 4:9 1நாளா 4:10 லூக் 1:31-33 லூக் 1:40-47 லூக் 1:58-47 லூக் 11:27 லூக் 11:28 |
| 26 | என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. | நீதி 4:23 உபா 6:5 மத் 10:37 மத் 10:38 லூக் 14:26 2கொரி 5:14 2கொரி 5:15 2கொரி 8:5 எபே 3:17 |
| 27 | வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. | நீதி 22:14 |
| 28 | அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள். | நீதி 2:16-19 நீதி 7:12 நீதி 7:22-27 நீதி 9:18 நீதி 22:14 நியா 16:4-22 பிரச 7:26 எரே 3:2 |
| 29 | ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? | நீதி 23:21 நீதி 20:1 1சாமு 25:36 1சாமு 25:37 2சாமு 13:28 1இரா 20:16-22 ஏசா 5:11 ஏசா 5:22 ஏசா 28:7 ஏசா 28:8 நாகூ 1:10 மத் 24:49 மத் 24:50 லூக் 12:45 லூக் 12:46 எபே 5:18 |
| 30 | மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. | நீதி 20:1 ஆதி 9:21 ஏசா 5:11 ஆமோ 6:6 எபே 5:18 |
| 31 | மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். | நீதி 6:25 2சாமு 11:2 யோபு 33:1 சங் 119:37 மத் 5:28-30 மாற் 9:47 1யோவா 2:16 |
| 32 | முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். | நீதி 5:11 ஏசா 28:3 ஏசா 28:7 ஏசா 28:8 எரே 5:31 யாத் 7:5 யாத் 7:6 யாத் 7:12 லூக் 16:25 லூக் 16:26 ரோம 6:21 |
| 33 | உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். | ஆதி 19:32-38 |
| 34 | நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். | 1சாமு 25:33-38 1சாமு 30:16 1சாமு 30:17 2சாமு 13:28 1இரா 16:9 1இரா 20:16-22 யோவே 1:5 மத் 24:38 லூக் 17:27-29 லூக் 21:34 1தெச 5:2-7 |
| 35 | என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். | நீதி 27:22 எரே 5:3 எரே 31:18 |