இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 18

                   
புத்தகங்களைக் காட்டு
1பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.யாத் 33:16 சகரி 7:3 ரோம 1:1 2கொரி 6:17 யூதா 1:19
2மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.நீதி 1:7 நீதி 1:22 நீதி 17:16 சங் 1:1 சங் 1:2 மத் 8:34 1கொரி 8:1
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.நீதி 11:2 நீதி 22:10 நீதி 29:16 1சாமு 20:30 நெகே 4:4 சங் 69:9 சங் 69:20 சங் 123:3 சங் 123:4 மத் 27:39-44 1பேது 4:4 1பேது 4:14
4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.நீதி 10:11 நீதி 13:14 நீதி 16:22 நீதி 20:5 மத் 12:34 யோவா 4:14 யோவா 7:38 யோவா 7:39 கொலோ 3:16 கொலோ 4:6
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.நீதி 24:23 நீதி 28:21 லேவி 19:15 உபா 1:16 உபா 1:17 உபா 16:19 யோபு 13:7 யோபு 13:8 யோபு 34:19 மத் 22:16
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.நீதி 12:16 நீதி 13:10 நீதி 14:16 நீதி 16:27 நீதி 16:28 நீதி 17:14 நீதி 20:3 நீதி 27:3
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.நீதி 10:8 நீதி 10:14 நீதி 12:13 நீதி 13:3 பிரச 10:11-14
8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.நீதி 12:18 நீதி 16:28 நீதி 26:20-22 லேவி 19:16 சங் 52:2 சங் 64:3 சங் 64:4
9தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.நீதி 10:4 நீதி 23:20 நீதி 23:21 நீதி 24:30-34 மத் 25:26 ரோம 12:11 எபிரெ 6:12
10கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.ஆதி 17:1 யாத் 3:13-15 யாத் 6:3 யாத் 34:5-7 ஏசா 9:6 ஏசா 57:15 எரே 23:6 மத் 1:23 வெளிப் 1:8
11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.நீதி 10:15 நீதி 11:4 உபா 32:31 யோபு 31:24 யோபு 31:25 சங் 49:6-9 சங் 52:5-7 சங் 62:10 சங் 62:11 பிரச 7:12 லூக் 12:19-21
12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.நீதி 11:2 நீதி 16:18 நீதி 29:23 எசே 16:49 எசே 16:50 எசே 28:2 எசே 28:9 தானி 5:23 தானி 5:24 அப் 12:21-23
13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.உபா 13:14 2சாமு 16:4 2சாமு 19:24-30 எஸ்தர் 3:10-15 எஸ்தர் 8:5-17 யோபு 29:16 தானி 6:9 தானி 6:14 யோவா 7:51
14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?யோபு 1:20 யோபு 1:21 யோபு 2:7-10 சங் 147:3 ரோம 5:3-5 ரோம 8:35-37 2கொரி 1:12 2கொரி 12:9 2கொரி 12:10 யாக் 1:2 1பேது 1:6
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.நீதி 1:5 நீதி 4:5 நீதி 4:7 நீதி 9:9 நீதி 10:14 நீதி 15:14 நீதி 23:23 1இரா 3:9 சங் 119:97-104 லூக் 8:8-10 லூக் 10:39 2தீமோ 3:15-17 யாக் 1:5
16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.நீதி 17:8 நீதி 19:6 நீதி 21:14 ஆதி 32:20 ஆதி 33:10 ஆதி 43:11 1சாமு 25:27
17தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.நீதி 18:13 2சாமு 16:1-3 2சாமு 19:24-27 அப் 24:5 அப் 24:6 அப் 24:12 அப் 24:13
18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.நீதி 16:33 யோசு 14:2 1சாமு 10:21-27 1சாமு 14:42 1நாளா 6:63 1நாளா 24:31 நெகே 11:1
19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.நீதி 6:19 ஆதி 4:5-8 ஆதி 27:41-45 ஆதி 32:6-11 ஆதி 37:3-5 ஆதி 37:11-5 ஆதி 37:18-27 2சாமு 13:22 2சாமு 13:28 1இரா 2:23-25 1இரா 12:16 2நாளா 13:17 அப் 15:39
20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.நீதி 12:13 நீதி 12:14 நீதி 13:2 நீதி 22:18 நீதி 22:21 நீதி 25:11 நீதி 25:12
21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதி 18:4-7 நீதி 10:20 நீதி 10:21 நீதி 10:31 நீதி 11:30 மத் 12:35-37 ரோம 10:14 ரோம 10:15 2கொரி 2:16 2கொரி 11:15 எபே 4:29 கொலோ 4:6 தீத் 1:10 தீத் 1:11 யாக் 3:6-9 2பேது 2:18
22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.நீதி 5:15-23 நீதி 12:4 நீதி 19:14 நீதி 31:10-31 ஆதி 24:67 ஆதி 29:20 ஆதி 29:21 ஆதி 29:28 பிரச 9:9 ஓசி 12:12 1கொரி 7:2
23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.ரூத் 2:7 1சாமு 2:36 2இரா 4:1 2இரா 4:2 ஏசா 66:2 மத் 5:3 யாக் 1:9-11
24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.நீதி 17:17 நீதி 27:9 1சாமு 19:4 1சாமு 19:5 1சாமு 30:26-31 2சாமு 9:1-13 2சாமு 16:17 2சாமு 17:27-29 2சாமு 19:30-39 2சாமு 21:7 1நாளா 12:38-40 மத் 26:49 மத் 26:50
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.