இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.நீதி 19:22 நீதி 12:26 நீதி 15:16 நீதி 16:8 நீதி 28:6 சங் 37:26 மத் 16:26 யாக் 2:5 யாக் 2:6
2ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.நீதி 10:21 பிரச 12:9 ஏசா 27:11 ஓசி 4:6 யோவா 16:3 ரோம 10:2 பிலிப் 1:9
3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.ஆதி 3:6-12 ஆதி 4:5-14 எண் 16:19-41 எண் 17:12 எண் 17:13 1சாமு 13:13 1சாமு 15:23 1சாமு 22:13-23 1இரா 20:42 1இரா 20:43 2இரா 3:9 2இரா 3:10 2இரா 6:33 2நாளா 16:9 2நாளா 16:10 அப் 13:45 அப் 13:46
4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.நீதி 19:6 நீதி 19:7 நீதி 14:20 லூக் 15:13-15
5பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.நீதி 19:9 நீதி 6:19 நீதி 21:28 யாத் 23:1 உபா 19:16-21 சங் 120:3 சங் 120:4 தானி 6:24
6பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.நீதி 19:12 நீதி 16:15 நீதி 29:26 ஆதி 42:6 2சாமு 19:19-39 யோபு 29:24 யோபு 29:25 சங் 45:12 மத் 2:11
7தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.நீதி 19:4 நீதி 14:20 சங் 38:11 சங் 88:8 சங் 88:18 பிரச 9:15 பிரச 9:16 யாக் 2:6
8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.நீதி 17:16 எசே 36:26
9பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.ஏசா 9:15-17 எரே 23:25-32 எரே 28:15-17 எரே 29:31 எரே 29:32 எசே 13:22 2தெச 2:8-10 1தீமோ 4:1 1தீமோ 4:2 2பேது 2:1-3 வெளிப் 19:20 வெளிப் 21:8 வெளிப் 22:15
10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.நீதி 30:21 நீதி 30:22 1சாமு 25:36 எஸ்தர் 3:15 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஓசி 7:3-5 ஓசி 9:1 ஆமோ 6:3-6 லூக் 16:19 லூக் 16:23 யாக் 4:9
11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.நீதி 12:16 நீதி 14:29 நீதி 15:18 நீதி 16:32 நீதி 17:14 கொலோ 3:12 கொலோ 3:13 யாக் 1:19
12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.நீதி 16:14 நீதி 16:15 நீதி 20:2 நீதி 28:15 எஸ்தர் 7:8 பிரச 8:4 தானி 2:12 தானி 2:13 தானி 3:19-23 தானி 5:19 தானி 6:24 லூக் 12:4 லூக் 12:5
13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.நீதி 10:1 நீதி 15:20 நீதி 17:21 நீதி 17:25 2சாமு 13:1-18 பிரச 2:18 பிரச 2:19
14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.நீதி 13:22 உபா 21:16 யோசு 11:23 2கொரி 12:14
15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.நீதி 19:24 நீதி 6:9 நீதி 6:10 நீதி 20:13 நீதி 23:21 நீதி 24:33 ஏசா 56:10 ரோம 13:11 ரோம 13:12 எபே 5:14
16கட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.நீதி 3:1 நீதி 29:18 சங் 103:18 பிரச 8:5 பிரச 12:13 எரே 7:23 லூக் 10:28 லூக் 11:28 யோவா 14:15 யோவா 14:21-23 யோவா 15:10-14 1கொரி 7:19 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 3:22 1யோவா 5:3 வெளிப் 22:14
17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.நீதி 14:21 நீதி 28:8 நீதி 28:27 2சாமு 12:6 பிரச 11:1
18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.நீதி 13:24 நீதி 22:15 நீதி 23:13 நீதி 23:14 நீதி 29:15 நீதி 29:17 எபிரெ 12:7-10
19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.நீதி 22:24 நீதி 22:25 நீதி 25:28 நீதி 29:22 1சாமு 20:30 1சாமு 20:31 1சாமு 22:7-23 1சாமு 24:17-22 1சாமு 26:21-25 2சாமு 16:5 2சாமு 16:6
20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.நீதி 1:8 நீதி 2:1-9 நீதி 8:34 நீதி 8:35
21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.நீதி 12:2 ஆதி 37:19 ஆதி 37:20 எஸ்தர் 9:25 சங் 21:11 சங் 33:10 சங் 33:11 சங் 83:4 பிரச 7:29 ஏசா 7:6 ஏசா 7:7 தானி 11:24 தானி 11:25 மத் 26:4 மத் 26:5 மத் 27:63 மத் 27:64
22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.1நாளா 29:2 1நாளா 29:3 1நாளா 29:17 2நாளா 6:8 மாற் 12:41-44 மாற் 14:6-8 2கொரி 8:2 2கொரி 8:3 2கொரி 8:12
23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.நீதி 10:27 நீதி 14:26 நீதி 14:27 சங் 19:9 சங் 33:18 சங் 33:19 சங் 34:9-11 சங் 85:9 சங் 103:17 சங் 145:18-20 மல்கி 3:16 மல்கி 3:17 மல்கி 4:2 அப் 9:31
24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.நீதி 19:15 நீதி 6:9 நீதி 6:10 நீதி 12:27 நீதி 15:19 நீதி 24:30-34 நீதி 26:13-16 சங் 74:11
25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.நீதி 21:11 உபா 13:11 உபா 21:21
26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.நீதி 10:1 நீதி 17:25 நீதி 23:22-25 நீதி 28:14 நீதி 30:11 நீதி 30:17 உபா 21:18-21 லூக் 15:12-16 லூக் 15:30-16
27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.நீதி 14:7 உபா 13:1-4 1இரா 22:22-28 மத் 7:15 மத் 16:6 மத் 16:12 மாற் 4:24 மாற் 7:6-14 யோவா 10:5 2கொரி 11:13-15 எபே 4:14 1தீமோ 4:7 1தீமோ 6:3-5 2பேது 2:1 2பேது 2:2 1யோவா 4:1 2யோவா 1:10 வெளிப் 2:2
28பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.1இரா 21:10 1இரா 21:13 அப் 6:11-13
29பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.நீதி 3:34 நீதி 9:12 ஏசா 28:22 ஏசா 29:20 அப் 13:40 அப் 13:41 2பேது 3:3-7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.