| 1 | சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம். | நீதி 15:17 சங் 37:16 |
| 2 | புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். | நீதி 11:29 நீதி 14:35 ஆதி 24:4-67 பிரச 4:13 |
| 3 | வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். | நீதி 27:21 சங் 26:2 சங் 66:10 ஏசா 48:10 எரே 17:10 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3 1பேது 1:7 வெளிப் 2:23 |
| 4 | துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். | நீதி 28:4 1சாமு 22:7-11 1இரா 22:6-28 ஏசா 30:10 எரே 5:31 2தீமோ 4:3 2தீமோ 4:4 1யோவா 4:5 வெளிப் 13:3-8 |
| 5 | ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான். | நீதி 14:21 நீதி 14:31 சங் 69:9 1யோவா 3:17 |
| 6 | பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே. | ஆதி 50:23 யோபு 42:16 யோபு 42:17 சங் 127:3-5 சங் 128:3-6 |
| 7 | மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது. | நீதி 26:7 சங் 50:16 சங் 50:17 மத் 7:5 |
| 8 | பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். | நீதி 17:23 சங் 18:16 சங் 19:6 சங் 21:13 சங் 29:4 யாத் 23:8 உபா 16:19 |
| 9 | குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். | நீதி 10:12 சங் 32:1 1பேது 4:8 |
| 10 | மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும். | நீதி 9:8 நீதி 9:9 நீதி 13:1 நீதி 15:5 நீதி 19:25 நீதி 27:22 நீதி 29:19 சங் 141:5 வெளிப் 3:19 |
| 11 | துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். | 2சாமு 15:12 2சாமு 16:5-9 2சாமு 18:15 2சாமு 18:19 2சாமு 20:1 2சாமு 20:22 1இரா 2:24 1இரா 2:25 1இரா 2:31 1இரா 2:46 மத் 21:41 மத் 22:7 லூக் 19:27 |
| 12 | தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி. | நீதி 28:15 2சாமு 17:8 2இரா 2:24 ஓசி 13:8 |
| 13 | நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. | 1சாமு 24:17 1சாமு 31:2 1சாமு 31:3 2சாமு 21:1-14 சங் 35:12 சங் 38:20 சங் 55:12-15 சங் 109:4-13 எரே 18:20 எரே 18:21 மத் 27:5 மத் 27:25 ரோம 12:17 1தெச 5:15 1பேது 3:9 |
| 14 | சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. | நீதி 17:19 நீதி 26:21 நீதி 29:22 நியா 12:1-6 2சாமு 2:14-17 2சாமு 19:41-43 2சாமு 20:1-22 2நாளா 10:14-16 2நாளா 13:17 2நாளா 25:17-24 2நாளா 28:6 |
| 15 | துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். | நீதி 24:23 நீதி 24:24 யாத் 23:7 1இரா 21:13 ஏசா 5:23 ஏசா 55:8 ஏசா 55:9 எசே 22:27-29 ஆமோ 5:7 ஆமோ 5:12 ஆமோ 6:12 லூக் 23:18-25 ரோம 4:5 யாக் 5:6 |
| 16 | ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. | நீதி 1:22 நீதி 1:23 நீதி 8:4 நீதி 8:5 நீதி 9:4-6 ஏசா 55:1-3 அப் 13:46 2கொரி 6:1 |
| 17 | சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். | நீதி 18:24 நீதி 19:7 ரூத் 1:16 1சாமு 18:3 1சாமு 19:2 1சாமு 20:17 1சாமு 23:16 2சாமு 1:26 2சாமு 9:1-13 எஸ்தர் 4:14 யோவா 15:13 யோவா 15:14 எபிரெ 2:11 |
| 18 | புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான். | நீதி 6:1-5 நீதி 11:15 நீதி 20:16 நீதி 22:16 நீதி 22:27 |
| 19 | வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். | நீதி 17:14 நீதி 29:9 நீதி 29:22 2கொரி 12:20 யாக் 1:20 யாக் 3:14-16 |
| 20 | மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். | நீதி 3:32 நீதி 6:12-15 நீதி 8:13 சங் 18:26 |
| 21 | மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. | நீதி 17:25 நீதி 10:1 நீதி 15:20 நீதி 19:13 ஆதி 26:34 1சாமு 2:32-35 1சாமு 8:3 2சாமு 18:33 |
| 22 | மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். | நீதி 12:25 நீதி 15:13 நீதி 18:14 பிரச 9:7-9 ரோம 5:2-5 |
| 23 | துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட. மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். | நீதி 17:8 நீதி 18:16 நீதி 21:14 யாத் 23:8 உபா 16:19 1சாமு 8:3 1சாமு 12:3 ஏசா 1:23 எசே 22:12 மீகா 7:3 மாற் 14:10 மாற் 14:11 |
| 24 | ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும். | நீதி 14:6 நீதி 15:14 பிரச 2:14 பிரச 8:1 யோவா 7:17 |
| 25 | மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். | நீதி 10:1 நீதி 15:20 நீதி 19:13 2சாமு 13:1-22 பிரச 2:18 பிரச 2:19 |
| 26 | நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. | நீதி 17:15 நீதி 18:5 ஆதி 18:25 |
| 27 | அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். | நீதி 10:19 நீதி 15:28 யாக் 1:19 யாக் 3:2 |
| 28 | பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். | நீதி 15:2 யோபு 13:5 பிரச 5:3 பிரச 10:3 பிரச 10:14 |