இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.நீதி 16:9 நீதி 19:21 நீதி 20:24 நீதி 21:1 2நாளா 18:31 எஸ்றா 7:27 நெகே 1:11 சங் 10:17 சங் 119:36 எரே 10:23 எரே 32:39 எரே 32:40 எசே 36:26 எசே 36:27 2கொரி 8:16 பிலிப் 2:13 யாக் 1:16-18
2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.நீதி 16:25 நீதி 21:2 நீதி 30:12 1சாமு 15:13 1சாமு 15:14 சங் 36:2 எரே 2:22 எரே 2:23 லூக் 18:9-11 ரோம 7:7-9
3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.யோபு 5:8 சங் 37:4 சங் 37:5 சங் 55:22 மத் 6:25-34 லூக் 12:22 பிலிப் 4:6 1பேது 5:7
4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.ஏசா 43:7 ஏசா 43:21 ரோம 11:36 வெளிப் 4:11
5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.நீதி 6:16 நீதி 6:17 நீதி 8:13 யோபு 40:12 யாக் 4:6
6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.நீதி 20:28 சங் 85:10 தானி 4:27 மீகா 7:18-20 லூக் 11:41 யோவா 15:2 அப் 15:9 1பேது 1:22
7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.சங் 69:31 ரோம 8:31 பிலிப் 4:18 கொலோ 1:10 கொலோ 3:20 எபிரெ 13:21 1யோவா 3:22
8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.நீதி 15:16 சங் 37:16 1தீமோ 6:6-9
9மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.நீதி 16:1 நீதி 19:21 நீதி 20:24 நீதி 21:30 சங் 37:23 ஏசா 46:10 எரே 10:23
10ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.நீதி 16:12 நீதி 16:13 ஆதி 44:5 ஆதி 44:15 உபா 17:18-20 2சாமு 23:3 2சாமு 23:4 சங் 45:6 சங் 45:7 சங் 72:1-4 சங் 99:4 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 எரே 23:6
11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.நீதி 11:1 நீதி 20:10 நீதி 20:23 லேவி 19:35 லேவி 19:36 உபா 25:13-15 எசே 45:10 ஓசி 12:7 ஆமோ 8:5 மீகா 6:11
12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.நீதி 28:9 உபா 25:16 லூக் 12:48
13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.நீதி 14:35 நீதி 22:11 சங் 101:5-7
14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.நீதி 19:12 நீதி 20:2 தானி 3:13-25 லூக் 12:4 லூக் 12:5
15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.நீதி 19:12 யோபு 29:23 யோபு 29:24 சங் 4:6 சங் 21:6 அப் 2:28
16பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியை சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!நீதி 3:15-18 நீதி 4:7 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:19 யோபு 28:13-28 சங் 119:127 பிரச 7:12 மத் 16:26 லூக் 12:21
17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.நீதி 4:24-27 ஏசா 35:8 அப் 10:35 அப் 24:16 தீத் 2:10-14
18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.நீதி 11:2 நீதி 17:19 நீதி 18:12 நீதி 29:23 எஸ்தர் 3:5 எஸ்தர் 6:6 எஸ்தர் 7:10 ஏசா 2:11 ஏசா 2:12 ஏசா 37:10-13 ஏசா 37:38-13 தானி 4:30-37 தானி 5:22 தானி 5:24 ஒபதி 1:3 ஒபதி 1:4 மத் 26:33-35 மத் 26:74-35 ரோம 11:20 1தீமோ 3:6
19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.சங் 34:18 சங் 138:6 ஏசா 57:15 மத் 5:3 லூக் 1:51-53 லூக் 18:13 லூக் 18:14
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.நீதி 8:35 நீதி 13:15 நீதி 17:2 நீதி 19:8 நீதி 24:3-5 ஆதி 41:38-40 தானி 1:19-21 மத் 10:16
21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.நீதி 16:23 நீதி 10:8 நீதி 23:15 1இரா 3:12 ரோம 16:19 யாக் 3:17
22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.நீதி 10:11 நீதி 13:14 நீதி 14:27 நீதி 18:4 யோவா 5:24 யோவா 6:63 யோவா 6:68
23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.நீதி 15:28 நீதி 22:17 நீதி 22:18 சங் 37:30 சங் 37:31 சங் 45:1 மத் 12:34 மத் 12:35 கொலோ 3:16
24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.நீதி 12:18 நீதி 15:23 நீதி 15:26 நீதி 23:16 நீதி 25:11 நீதி 25:12 நீதி 27:9 உபா 32:2 உன்ன 4:11 யோவா 20:19-21
25மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.நீதி 12:26 நீதி 14:12 ஏசா 28:15-19 யோவா 7:47-49 யோவா 9:40 அப் 26:9 2கொரி 13:5
26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.நீதி 9:12 நீதி 14:23 பிரச 6:7 1தெச 4:11 1தெச 4:12 2தெச 3:8-12
27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.1சாமு 25:17 2சாமு 20:1
28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.நீதி 6:14 நீதி 6:19 நீதி 15:18 நீதி 18:8 நீதி 26:20-22 நீதி 29:22 நீதி 30:33 1தீமோ 6:3-5 யாக் 3:14-16
29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.நீதி 1:10-14 நீதி 2:12-15 நீதி 3:31 1சாமு 19:11 1சாமு 19:17 1சாமு 22:7-9 1சாமு 23:19-21 நெகே 6:13 2பேது 3:17
30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.நீதி 6:12-14 நீதி 10:10 ஏசா 6:10 மத் 13:15 யோவா 3:20
31நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.நீதி 20:29 லேவி 19:32 யோபு 32:6 யோபு 32:7
32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.நீதி 14:29 நீதி 15:18 நீதி 19:11 சங் 103:8 எபே 5:1 யாக் 1:19
33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.எண் 26:55-65 யோசு 7:14 யோசு 18:5 யோசு 18:10 1சாமு 14:41 1சாமு 14:42 நெகே 11:1 யோனா 1:7 அப் 1:26
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.