| 1 | தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். | சங் 6:1 சங் 54:1 |
| 2 | எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். | சங் 13:1 சங் 13:2 சங் 32:3 சங் 38:6 சங் 43:2 சங் 102:9 சங் 102:10 ஏசா 38:14 |
| 3 | அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். | சங் 12:5 சங் 54:3 சங் 73:8 புலம் 3:34-36 |
| 4 | என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. | சங் 6:3 சங் 69:20 சங் 88:3 சங் 102:3-5 மத் 26:37 மத் 26:38 மாற் 14:33 மாற் 14:34 யோவா 12:27 2கொரி 1:8-10 |
| 5 | பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று. | சங் 119:120 2சாமு 15:14 யோபு 6:4 யோபு 23:15 யோபு 23:16 |
| 6 | அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன். | சங் 11:1 சங் 139:9 வெளிப் 12:14 |
| 7 | நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) | 1சாமு 27:1 2சாமு 15:14 2சாமு 17:21 2சாமு 17:22 நீதி 6:4 நீதி 6:5 எரே 9:2 எரே 37:12 |
| 8 | பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன். | சங் 18:4 ஏசா 17:12 ஏசா 17:13 மத் 7:25-27 |
| 9 | ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்; | ஆதி 11:7-9 2சாமு 15:31 2சாமு 17:1-14 யோவா 7:45-53 அப் 23:6-10 |
| 10 | அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது; | சங் 59:6 சங் 59:14 சங் 59:15 1சாமு 19:11 2சாமு 17:1 2சாமு 17:2 ஓசி 7:6 மீகா 2:1 மீகா 2:2 யோவா 18:3 யோவா 18:28 அப் 9:24 |
| 11 | கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை. | எசே 22:1-12 அப் 7:51 அப் 7:52 |
| 12 | என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். | சங் 41:9 |
| 13 | எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். | 2சாமு 15:12 2சாமு 16:23 எரே 9:4 மீகா 7:5 |
| 14 | நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம். | சங் 42:4 சங் 122:1 ஏசா 2:3 எசே 33:31 |
| 15 | மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது. | சங் 59:13 சங் 69:22-28 சங் 109:6-20 2சாமு 17:23 2சாமு 18:9 2சாமு 18:14 மத் 27:5 அப் 1:18-20 |
| 16 | நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். | சங் 50:15 சங் 73:28 சங் 91:15 சங் 109:4 லூக் 6:11 லூக் 6:12 |
| 17 | அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். | சங் 5:2 சங் 5:3 சங் 119:62 சங் 119:147 சங் 119:148 தானி 6:10 தானி 6:13 மாற் 1:35 மாற் 6:46 மாற் 6:48 லூக் 18:1-7 அப் 3:1 அப் 10:3 அப் 10:9 அப் 10:30 எபே 6:18 1தெச 5:17 |
| 18 | திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். | சங் 3:6 சங் 3:7 சங் 27:1-3 சங் 57:3 சங் 118:10-12 2சாமு 18:28 2சாமு 22:1 அப் 2:33-36 |
| 19 | ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா) | சங் 65:5 சங் 143:12 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 6:10 வெளிப் 6:11 |
| 20 | அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான். | 1சாமு 22:17 1சாமு 24:10 2சாமு 18:12 அப் 12:1 |
| 21 | அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். | சங் 28:3 சங் 57:4 சங் 62:4 சங் 64:3 நீதி 5:3 நீதி 5:4 நீதி 12:18 நீதி 26:24-26 நீதி 26:28-26 மத் 26:25 லூக் 20:20 லூக் 20:21 |
| 22 | கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். | சங் 27:14 சங் 37:5 சங் 42:10 சங் 42:11 சங் 62:8 சங் 63:8 ஏசா 50:10 மத் 6:25 மத் 6:31-34 மத் 11:28 லூக் 12:22 பிலிப் 4:6 பிலிப் 4:7 1பேது 5:7 |
| 23 | தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன். | சங் 7:15 சங் 7:16 சங் 58:9 சங் 59:12 சங் 59:13 |