| 1 | தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். | சங் 16:1 சங் 57:1 சங் 58:1 சங் 59:1 சங் 60:1 |
| 2 | என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். | சங் 54:5 |
| 3 | நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். | சங் 34:4 சங் 55:4 சங் 55:5 1சாமு 21:10 1சாமு 21:12 1சாமு 30:6 2நாளா 20:3 2கொரி 1:8-10 2கொரி 7:5 2கொரி 7:6 |
| 4 | தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? | சங் 56:10 சங் 56:11 சங் 12:6 சங் 19:7 சங் 19:8 சங் 119:89 சங் 119:90 சங் 119:160 சங் 138:2 யோவா 10:35 |
| 5 | நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது. | ஏசா 29:20 ஏசா 29:21 மத் 22:15 மத் 26:61 லூக் 11:54 யோவா 2:19 2பேது 3:16 |
| 6 | அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். | சங் 2:1-3 சங் 59:3 சங் 71:10 சங் 140:2 மத் 26:3 மத் 26:4 மத் 26:57 மத் 27:1 அப் 4:5 அப் 4:6 அப் 23:12-14 |
| 7 | அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும். | சங் 94:20 சங் 94:21 பிரச 8:8 ஏசா 28:15 எரே 7:10 ஆபகூ 1:13 |
| 8 | என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? | சங் 105:13 சங் 105:14 சங் 121:8 எண் 33:2-56 1சாமு 19:18 1சாமு 22:1-5 1சாமு 27:1 ஏசா 63:9 2கொரி 11:26 எபிரெ 11:8 எபிரெ 11:13 எபிரெ 11:38 |
| 9 | நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். | சங் 118:11-13 யாத் 17:9-11 எரே 33:3 |
| 10 | தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். | சங் 56:4 சங் 60:6 ஆதி 32:11 மத் 24:35 எபிரெ 6:18 2பேது 1:4 |
| 11 | தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? | சங் 27:1 சங் 112:7 சங் 112:8 ஏசா 51:7 ஏசா 51:8 ஏசா 51:12 ஏசா 51:13 |
| 12 | தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன். | சங் 66:13 சங் 66:14 சங் 76:11 சங் 116:14-19 சங் 119:106 ஆதி 28:20-22 ஆதி 35:1-3 எண் 30:2-16 1சாமு 1:11 1சாமு 1:24-28 பிரச 5:4-6 |
| 13 | நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? | சங் 86:12 சங் 86:13 சங் 116:8 2கொரி 1:10 1தெச 1:10 எபிரெ 2:15 யாக் 5:20 |