1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.1சாமு 23:19 1சாமு 23:20 1சாமு 26:1 மீகா 7:5 மீகா 7:6 மத் 10:21 2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.சங் 5:1-3 சங் 13:3 சங் 55:1 சங் 55:2 சங் 130:2 சங் 143:7 3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா)சங் 69:8 சங் 86:14 யோபு 19:13-15 4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.சங் 118:6 சங் 118:7 சங் 118:13 1நாளா 12:18 ஏசா 41:10 ஏசா 42:1 ஏசா 50:7-9 ரோம 8:31 எபிரெ 13:6 5அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.சங் 31:23 சங் 137:8 2தீமோ 4:14 வெளிப் 18:6 6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.சங் 66:13-16 சங் 107:22 சங் 116:17 உபா 12:6 உபா 12:7 7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.சங் 34:19 ஆதி 48:16 1சாமு 26:24 2சாமு 4:9 2தீமோ 4:18