| 1 | தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். | 2சாமு 12:1-13 |
| 2 | என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். | சங் 51:7 எசே 36:25 சகரி 13:1 1கொரி 6:11 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 10:21 எபிரெ 10:22 1யோவா 1:7-9 வெளிப் 1:5 வெளிப் 7:14 |
| 3 | என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. | சங் 32:5 சங் 38:18 லேவி 26:40 லேவி 26:41 நெகே 9:2 யோபு 33:27 நீதி 28:13 லூக் 15:18-21 |
| 4 | தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். | ஆதி 9:6 ஆதி 20:6 ஆதி 39:9 லேவி 5:19 லேவி 6:2-7 2சாமு 12:9 2சாமு 12:10 2சாமு 12:13 2சாமு 12:14 யாக் 2:9 யாக் 2:11 |
| 5 | இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். | சங் 58:3 ஆதி 5:3 ஆதி 8:21 யோபு 14:4 யோபு 15:14-16 யோவா 3:6 ரோம 5:12 எபே 2:3 |
| 6 | இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். | சங் 26:2 சங் 125:4 ஆதி 20:5 ஆதி 20:6 2இரா 20:3 1நாளா 29:17 2நாளா 31:20 2நாளா 31:21 நீதி 2:21 எரே 5:3 யோவா 4:23 யோவா 4:24 2கொரி 1:12 யாக் 4:8 |
| 7 | நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். | லேவி 14:4-7 லேவி 14:49-52 எண் 19:18-20 எபிரெ 9:19 |
| 8 | நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். | சங் 13:5 சங் 30:11 சங் 119:81 சங் 119:82 சங் 126:5 சங் 126:6 மத் 5:4 |
| 9 | என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். | ஏசா 38:17 எரே 16:17 மீகா 7:18 மீகா 7:19 |
| 10 | தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். | 2கொரி 5:17 எபே 2:10 |
| 11 | உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். | சங் 43:2 சங் 71:9 சங் 71:18 ஆதி 4:14 2இரா 13:23 2இரா 17:18-23 2இரா 23:27 2தெச 1:9 |
| 12 | உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். | சங் 85:6-8 யோபு 29:2 யோபு 29:3 ஏசா 57:17 ஏசா 57:18 எரே 31:9-14 |
| 13 | அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். | சங் 32:5 சங் 32:8-10 சகரி 3:1-8 லூக் 22:32 யோவா 21:15-17 அப் 2:38-41 அப் 9:19-22 2கொரி 5:8-20 |
| 14 | தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும். | சங் 26:9 சங் 55:23 ஆதி 9:6 ஆதி 42:22 2சாமு 3:28 2சாமு 11:15-17 2சாமு 12:9 2சாமு 21:1 |
| 15 | ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். | ஆதி 44:16 1சாமு 2:9 எசே 16:63 மத் 22:12 ரோம 3:19 |
| 16 | பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. | சங் 51:6 யாத் 21:14 எண் 15:27 எண் 15:30 எண் 15:31 எண் 35:31 உபா 22:22 ஓசி 6:6 |
| 17 | தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். | சங் 107:22 மாற் 12:33 ரோம 12:1 பிலிப் 4:18 எபிரெ 13:16 1பேது 2:5 |
| 18 | சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக. | சங் 25:22 சங் 102:16 சங் 122:6-9 சங் 137:5 சங் 137:6 ஏசா 62:1 ஏசா 62:6 ஏசா 62:7 எரே 51:50 2கொரி 11:28 2கொரி 11:29 |
| 19 | அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள். | சங் 66:13-15 சங் 118:27 எபே 5:2 |