இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 50

                   
புத்தகங்களைக் காட்டு
1வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.சங் 73:1 சங் 83:1 1நாளா 15:17 1நாளா 16:37 1நாளா 25:2 1நாளா 25:6 2நாளா 29:30
2பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.சங் 68:24 ஏசா 12:6 ஏசா 26:21 ஓசி 5:15 ஆபகூ 2:20 எபிரெ 12:22-26
3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.சங் 48:14 சங் 68:20 வெளிப் 22:20
4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.சங் 50:6 உபா 4:36 உபா 30:19 உபா 31:28 உபா 32:1 ஏசா 1:2 மீகா 6:1 மீகா 6:2
5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.மத் 24:31 1தெச 4:16 1தெச 4:17 2தெச 2:1
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)சங் 97:6 ரோம 2:5 வெளிப் 16:5-7 வெளிப் 19:2
7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.சங் 81:8 ஏசா 1:18 எரே 2:4 எரே 2:5 எரே 2:9 மீகா 6:1-8
8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.சங் 40:6-8 சங் 51:16 ஏசா 1:11-31 எரே 7:21-23 ஓசி 6:6 எபிரெ 10:4-10
9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.ஏசா 43:23 ஏசா 43:24 மீகா 6:6-8 அப் 17:25 எபிரெ 10:4-6
10சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.சங் 8:6-8 சங் 104:24 சங் 104:25 ஆதி 1:24 ஆதி 1:25 ஆதி 2:19 ஆதி 8:17 ஆதி 9:2 ஆதி 9:3 1நாளா 29:14-16 யோபு 40:15-24 எரே 27:5 எரே 27:6 தானி 2:38
11மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.சங் 104:12 சங் 147:9 ஆதி 1:20-22 யோபு 38:41 யோபு 39:13-18 யோபு 39:26-30 மத் 6:26 மத் 10:29-31 லூக் 12:24
12நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.சங் 24:1 சங் 24:2 சங் 115:15 சங் 115:16 யாத் 19:5 உபா 10:14 யோபு 41:11 1கொரி 10:26-28
13நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;சங் 50:23 சங் 69:30 சங் 69:31 சங் 107:21 சங் 107:22 சங் 147:1 ஓசி 14:2 1தெச 5:18 எபிரெ 13:15 1பேது 2:5 1பேது 2:9
15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.சங் 77:2 சங் 91:15 சங் 107:6-13 சங் 107:19-13 சங் 107:28-13 2நாளா 33:12 2நாளா 33:13 யோபு 22:27 சகரி 13:9 லூக் 22:44 அப் 16:25 யாக் 5:13
16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.ஏசா 48:22 ஏசா 55:6 ஏசா 55:7 எசே 18:27
17சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.நீதி 1:7 நீதி 1:28 நீதி 1:29 நீதி 5:12 நீதி 5:13 நீதி 8:36 நீதி 12:1 யோவா 3:20 ரோம 1:28 ரோம 2:21 ரோம 2:23 2தெச 2:10-12 2தீமோ 4:3 2தீமோ 4:4
18நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.நீதி 1:10-19 ஏசா 5:23 மீகா 7:3 ரோம 1:32 எபே 5:11-13
19உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.சங் 52:3-4 எரே 9:5
20நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.சங் 31:18 மத் 5:11 லூக் 22:65
21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.சங் 50:3 சங் 109:1-3 பிரச 8:11 பிரச 8:12 ஏசா 26:10 ஏசா 57:11 ரோம 2:4 ரோம 2:5 2பேது 3:9
22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.உபா 32:18 பிரச 7:14 எசே 18:28 ஆகா 1:5 லூக் 15:17
23ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.சங் 50:14 சங் 50:15 சங் 22:23 சங் 27:6 சங் 86:9 சங் 86:12 ரோம 12:1 ரோம 15:6 ரோம 15:9 கலா 1:24 1பேது 2:9
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.