இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 45

                   
புத்தகங்களைக் காட்டு
1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.சங் 69:1 சங் 80:1
2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.உன்ன 2:3 உன்ன 5:10-16 சகரி 9:17 மத் 17:2 யோவா 1:14 கொலோ 1:15-18 எபிரெ 1:3 எபிரெ 1:4 எபிரெ 7:26 வெளிப் 1:13-18
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,ஏசா 49:2 ஏசா 63:1-6 எபிரெ 4:12 வெளிப் 1:16 வெளிப் 19:15 வெளிப் 19:21
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.வெளிப் 6:2 வெளிப் 19:11
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.சங் 21:12 சங் 38:2 எண் 24:8 சகரி 9:13 சகரி 9:14
6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.சங் 89:29 சங் 89:36 சங் 89:37 சங் 93:2 சங் 145:13 தானி 2:44 லூக் 1:32 லூக் 1:33 எபிரெ 1:8
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.சங் 33:5 சங் 99:4 மத் 3:15 எபிரெ 1:9 எபிரெ 7:26
8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.உன்ன 1:3 உன்ன 1:13 உன்ன 3:6 உன்ன 4:6 உன்ன 4:13 உன்ன 4:14 உன்ன 5:1 உன்ன 5:5 உன்ன 5:13 மத் 2:11 யோவா 19:39 2கொரி 2:14-16
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.சங் 45:13 சங் 72:10 உன்ன 6:8 உன்ன 6:9 உன்ன 7:1 ஏசா 49:23 ஏசா 60:10 ஏசா 60:11 வெளிப் 21:24
10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.உன்ன 2:10-13 ஏசா 55:1-3 2கொரி 6:17 2கொரி 6:18 2கொரி 7:1
11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.உன்ன 1:8 உன்ன 1:12-16 உன்ன 2:2 உன்ன 2:14 உன்ன 4:1-5 உன்ன 4:7-5 உன்ன 4:9-5 உன்ன 4:10-5 உன்ன 6:4 உன்ன 7:1-10 ஏசா 62:4 ஏசா 62:5 செப் 3:17 எபே 5:26 எபே 5:27
12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஜசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.ஏசா 23:17 ஏசா 23:18 அப் 21:3-6
13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.சங் 45:9 சங் 45:10 உன்ன 7:1 ஏசா 61:10 1பேது 2:9 வெளிப் 19:7 வெளிப் 19:8
14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.உன்ன 1:4 யோவா 17:24 2கொரி 11:2
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.ஏசா 35:10 ஏசா 51:11 ஏசா 55:12 ஏசா 55:13 ஏசா 60:19 ஏசா 60:20 ஏசா 61:10 யூதா 1:24 வெளிப் 7:15-17
16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.சங் 22:30 மத் 19:29 மாற் 10:29 மாற் 10:30 பிலிப் 3:7 பிலிப் 3:8
17உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.சங் 22:30 சங் 22:31 சங் 72:17-19 சங் 145:4-7 ஏசா 59:21 மல்கி 1:11 மத் 26:13 1கொரி 11:26
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.