| 1 | தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். | சங் 84:1 சங் 85:1 சங் 87:1 |
| 2 | ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், | சங் 23:4 சங் 27:3 மத் 8:24-26 எபிரெ 13:6 |
| 3 | அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா) | சங் 18:4 சங் 93:3 சங் 93:4 யோபு 38:11 ஏசா 5:3 ஏசா 17:12 ஏசா 17:13 எரே 5:22 மத் 7:25 வெளிப் 17:15 |
| 4 | ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். | சங் 23:2 சங் 36:8 சங் 36:9 ஏசா 8:6 ஏசா 8:7 ஏசா 48:18 எசே 47:1-12 வெளிப் 22:1-3 |
| 5 | தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார். | சங் 68:18 உபா 23:14 ஏசா 12:6 எசே 43:7 எசே 43:9 ஓசி 11:9 யோவே 2:27 செப் 3:15 சகரி 2:5 சகரி 2:10 சகரி 2:11 சகரி 8:3 மத் 18:20 வெளிப் 2:1 |
| 6 | ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. | சங் 2:1-4 சங் 83:2-8 2நாளா 14:9-13 2நாளா 20:1 2நாளா 20:20-24 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 37:21-36 |
| 7 | சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) | சங் 46:11 எண் 14:9 2நாளா 13:12 ஏசா 8:10 மத் 28:20 ரோம 8:31 2தீமோ 4:22 |
| 8 | பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்துபாருங்கள். | சங் 66:5 சங் 92:4-6 சங் 111:2 சங் 111:3 எண் 23:23 |
| 9 | அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். | ஏசா 2:4 ஏசா 11:9 ஏசா 60:18 மீகா 4:3 மீகா 4:4 |
| 10 | நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். | ஆபகூ 2:20 சகரி 2:13 |
| 11 | சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) | சங் 46:1 சங் 46:7 சங் 48:3 உபா 33:27 எரே 16:19 |