| 1 | கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். | சங் 70:1 |
| 2 | உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது. | சங் 21:12 சங் 64:7 யோபு 6:4 புலம் 3:12 |
| 3 | உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. | சங் 31:9 2நாளா 26:19 யோபு 2:7 யோபு 2:8 யோபு 33:19-22 ஏசா 1:5 ஏசா 1:6 |
| 4 | என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. | சங் 40:12 எஸ்றா 9:6 |
| 5 | என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. | சங் 38:7 சங் 32:3 ஏசா 1:5 ஏசா 1:6 எரே 8:22 |
| 6 | நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். | சங் 35:14 சங் 42:5 சங் 57:6 சங் 145:14 |
| 7 | என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. | சங் 41:8 2நாளா 21:18 2நாளா 21:19 யோபு 7:5 யோபு 30:18 அப் 12:23 |
| 8 | நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். | சங் 22:1 சங் 22:2 சங் 32:3 யோபு 3:24 யோபு 30:28 ஏசா 59:11 |
| 9 | ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. | சங் 102:5 சங் 102:20 யோவா 1:48 ரோம 8:22 ரோம 8:23 ரோம 8:26 ரோம 8:27 2கொரி 5:2 |
| 10 | என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. | சங் 42:1 சங் 119:81-83 சங் 143:4-7 ஏசா 21:4 |
| 11 | என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். | சங் 31:11 யோபு 6:21-23 யோபு 19:13-17 மத் 26:56 யோவா 16:32 |
| 12 | என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். | சங் 10:9 சங் 64:2-5 சங் 119:110 சங் 140:5 சங் 141:9 2சாமு 17:1-3 லூக் 20:19 லூக் 20:20 |
| 13 | நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன். | சங் 39:2 சங் 39:9 2சாமு 16:10-12 ஏசா 53:7 1பேது 2:23 |
| 14 | காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன். | ஆமோ 5:13 மீகா 7:5 மாற் 15:3-5 யோவா 8:6 |
| 15 | கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர். | சங் 39:7 சங் 123:1-3 |
| 16 | அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. | சங் 13:3 சங் 13:4 சங் 35:24-26 |
| 17 | நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. | சங் 35:15 மீகா 4:6 மீகா 4:7 |
| 18 | என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். | சங் 32:5 சங் 51:3 யோபு 31:33 யோபு 33:27 நீதி 28:13 |
| 19 | என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். | சங் 3:1 சங் 25:19 சங் 56:1 சங் 56:2 சங் 59:1-3 |
| 20 | நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். | சங் 7:4 சங் 35:12 சங் 109:3-5 1சாமு 19:4-6 1சாமு 23:5 1சாமு 23:12 1சாமு 25:16 1சாமு 25:21 எரே 18:20 |
| 21 | கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். | சங் 22:1 சங் 22:11 சங் 22:19 சங் 22:24 சங் 35:21 சங் 35:22 |
| 22 | என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். | சங் 40:13 சங் 40:17 சங் 70:1 சங் 70:5 சங் 71:12 சங் 141:1 |