| 1 | பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. | சங் 37:7 1சாமு 1:6-8 நீதி 19:3 நீதி 24:1 நீதி 24:19 |
| 2 | அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். | சங் 37:35 சங் 37:36 சங் 73:17-20 சங் 90:5 சங் 90:6 சங் 92:7 சங் 129:5-7 யோபு 20:5-9 யாக் 1:10 யாக் 1:11 1பேது 1:24 |
| 3 | கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். | சங் 4:5 சங் 26:1 ஏசா 1:16-19 ஏசா 50:10 எரே 17:7 எரே 17:8 1கொரி 15:57 1கொரி 15:58 எபிரெ 6:10-12 |
| 4 | கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். | சங் 43:4 சங் 104:34 யோபு 27:10 யோபு 34:9 உன்ன 2:3 ஏசா 58:14 1பேது 1:8 |
| 5 | உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். | சங் 22:8 சங் 55:22 நீதி 16:3 மத் 6:25 லூக் 12:22 லூக் 12:29 லூக் 12:30 பிலிப் 4:6 பிலிப் 4:7 1பேது 5:7 |
| 6 | உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். | சங் 31:20 ஏசா 54:17 மீகா 7:8 மீகா 7:9 1கொரி 4:5 |
| 7 | கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே. | சங் 62:1 யோசு 10:12 யோனா 1:11 |
| 8 | கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். | யோபு 5:2 யோபு 18:4 நீதி 14:29 நீதி 16:32 எபே 4:26 எபே 4:31 யாக் 1:19 யாக் 1:20 யாக் 3:14-18 |
| 9 | பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். | சங் 37:35 சங் 37:36 சங் 55:23 யோபு 20:23-29 யோபு 27:13 யோபு 27:14-23 |
| 10 | இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. | சங் 73:18-20 யோபு 24:24 எபிரெ 10:36 எபிரெ 10:37 1பேது 4:7 வெளிப் 6:10 வெளிப் 6:11 |
| 11 | சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். | மத் 5:5 கலா 5:22 கலா 5:23 1தீமோ 6:11 யாக் 1:21 யாக் 3:13 |
| 12 | துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். | சங் 37:32 1சாமு 18:21 1சாமு 23:7-9 2சாமு 15:10-12 எஸ்தர் 3:6 மத் 26:4 மத் 26:16 |
| 13 | ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். | சங் 2:4 நீதி 1:26 |
| 14 | சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். | சங் 64:2-6 அப் 12:2 அப் 12:3 அப் 12:11 அப் 12:23 |
| 15 | ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும். | சங் 7:14 சங் 7:15 சங் 35:8 1சாமு 31:4 2சாமு 17:23 எஸ்தர் 7:9 எஸ்தர் 7:10 ஏசா 37:38 மீகா 5:6 மத் 27:4 மத் 27:5 |
| 16 | அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. | நீதி 3:33 நீதி 13:25 நீதி 15:16 நீதி 15:17 நீதி 16:8 நீதி 30:9 பிரச 2:26 பிரச 4:6 மத் 6:11 1தீமோ 6:6 |
| 17 | துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். | சங் 10:15 யோபு 38:15 எசே 30:21-25 |
| 18 | உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். | சங் 1:6 சங் 31:7 மத் 6:32 2தீமோ 2:19 |
| 19 | அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். | பிரச 9:12 ஆமோ 5:13 மீகா 2:3 எபே 5:16 |
| 20 | துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். | சங் 68:2 சங் 92:9 நியா 5:31 லூக் 13:3 லூக் 13:5 2பேது 2:12 |
| 21 | துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். | உபா 28:12 உபா 28:43 உபா 28:44 2இரா 4:1-5 நெகே 5:1-5 நீதி 22:7 |
| 22 | அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். | சங் 37:11 சங் 37:18 சங் 32:1 சங் 115:15 சங் 128:1 நீதி 3:33 |
| 23 | நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். | சங் 17:5 சங் 85:13 சங் 119:133 சங் 121:3 சங் 121:8 1சாமு 2:9 யோபு 23:11 யோபு 23:12 நீதி 16:9 எரே 10:23 |
| 24 | அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். | சங் 34:19 சங் 34:20 சங் 40:2 சங் 91:12 சங் 94:18 சங் 145:14 நீதி 24:16 மீகா 7:7 மீகா 7:8 லூக் 2:34 லூக் 22:31 லூக் 22:32 லூக் 22:60-62 |
| 25 | நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. | சங் 71:9 சங் 71:18 யோபு 32:6 யோபு 32:7 அப் 21:16 பிலேமோ 1:8 பிலேமோ 1:9 |
| 26 | அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். | சங் 37:21 சங் 112:5 சங் 112:9 உபா 15:8-10 மத் 5:7 லூக் 6:35-38 |
| 27 | தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். | சங் 34:14 யோபு 28:28 நீதி 16:6 நீதி 16:17 ஏசா 1:16 ஏசா 1:17 2தீமோ 2:19 தீத் 2:11-14 |
| 28 | கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோகும். | சங் 11:7 சங் 45:6 சங் 45:7 சங் 99:4 ஏசா 30:18 ஏசா 61:8 எரே 9:24 |
| 29 | நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். | சங் 37:9 சங் 37:11 சங் 37:18 சங் 37:27 உபா 30:20 நீதி 2:21 2பேது 3:13 வெளிப் 21:3 வெளிப் 21:4 வெளிப் 21:7 |
| 30 | நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். | சங் 71:15 சங் 71:24 உபா 6:7-9 நீதி 10:21 நீதி 10:31 நீதி 15:7 நீதி 25:11-13 நீதி 27:9 மத் 12:35 எபே 4:29 கொலோ 4:6 |
| 31 | அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. | சங் 1:2 சங் 40:3 சங் 40:8 சங் 119:11 சங் 119:98 உபா 6:6 உபா 11:18-20 நீதி 4:4 ஏசா 51:7 எரே 31:33 எபிரெ 8:10 |
| 32 | துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். | சங் 37:12 சங் 10:8-10 எரே 20:10 லூக் 6:7 லூக் 11:54 லூக் 14:1 லூக் 19:47 லூக் 19:48 லூக் 20:20 அப் 9:24 |
| 33 | கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. | சங் 31:7 சங் 31:8 சங் 124:6 சங் 124:7 1சாமு 23:26-28 2தீமோ 4:17 2பேது 2:9 |
| 34 | நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். | சங் 37:3 சங் 37:7 சங் 37:9 சங் 27:14 நீதி 20:22 |
| 35 | கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். | சங் 73:3-11 எஸ்தர் 5:11 யோபு 5:3 யோபு 21:7-17 ஏசா 14:14-19 |
| 36 | ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. | சங் 37:10 யாத் 15:9 யாத் 15:10 யாத் 15:19 யோபு 20:5-29 ஏசா 10:16-19 ஏசா 10:33-19 ஏசா 10:34-19 அப் 12:22 அப் 12:23 |
| 37 | நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். | யோபு 1:1 யோபு 42:12-17 நீதி 14:32 ஏசா 32:17 ஏசா 57:2 லூக் 2:25-29 அப் 7:59 அப் 7:60 2தீமோ 4:6-8 2பேது 1:14 |
| 38 | அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. | சங் 1:4-6 சங் 9:17 சங் 52:5 நீதி 14:32 மத் 13:30 மத் 13:49 மத் 13:50 மத் 25:46 2தெச 1:8 2தெச 1:9 |
| 39 | நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். | சங் 3:8 ஏசா 12:2 யோனா 2:9 எபே 2:8 |
| 40 | கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார். | ஏசா 31:5 ஏசா 46:4 தானி 3:17 தானி 3:28 தானி 6:23 |