இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 36

                   
புத்தகங்களைக் காட்டு
1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.சங் 18:1 சங் 90:1 சங் 143:12 உபா 34:5 2தீமோ 2:24 தீத் 1:1 யாக் 1:1 2பேது 1:1 யூதா 1:1 வெளிப் 1:1
2அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.சங் 10:3 சங் 49:18 உபா 29:19 எரே 2:23 எரே 2:34 எரே 2:35 எரே 17:9 ஓசி 12:7 ஓசி 12:8 லூக் 10:29 லூக் 16:14 லூக் 16:15 ரோம 7:9 ரோம 10:3
3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.சங் 5:9 சங் 12:2 சங் 12:3 சங் 55:21 சங் 58:3 சங் 140:3 1சாமு 18:21 1சாமு 19:6 1சாமு 19:7 1சாமு 26:21 மத் 22:15-18 மத் 22:35-18
4அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.சங் 38:12 1சாமு 19:11 எஸ்தர் 5:14 எஸ்தர் 6:4 நீதி 4:16 ஓசி 7:6 ஓசி 7:7 மீகா 2:1 மத் 27:1 அப் 23:12
5கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.சங் 52:1 சங் 57:10 சங் 103:11 சங் 108:4 ஏசா 55:7-9
6உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.சங் 71:19 சங் 97:2 சங் 145:17 ஆதி 18:25 உபா 32:4 ஏசா 45:19 ஏசா 45:21-24 ரோம 3:25
7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.சங் 31:19 சங் 86:5 சங் 86:15 சங் 145:7 சங் 145:8 யாத் 34:6 யோவா 3:16 1யோவா 3:1 1யோவா 4:9 1யோவா 4:10
8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.சங் 16:11 சங் 17:15 சங் 63:5 சங் 65:4 உன்ன 5:1 ஏசா 25:6 ஏசா 55:1 ஏசா 55:2 எரே 31:12-14 சகரி 9:17 மத் 5:6 யோவா 7:37
9ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.ஏசா 12:3 எரே 2:13 யோவா 4:10 யோவா 4:14 யோவா 7:37-39 வெளிப் 21:6 வெளிப் 22:17
10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.சங் 103:17 எரே 31:3 யோவா 15:9 யோவா 15:10 1பேது 1:5
11பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.சங் 10:2 சங் 12:3-5 சங் 119:51 சங் 119:69 சங் 119:85 சங் 119:122 சங் 123:3 சங் 123:4 யோபு 40:11 யோபு 40:12 ஏசா 51:23 தானி 4:37
12அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.சங் 9:16 சங் 55:23 சங் 58:10 சங் 58:11 சங் 64:7-9 நியா 5:31 2தெச 1:8 2தெச 1:9 வெளிப் 15:4 வெளிப் 19:1-6
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.