| 1 | கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணும். | சங் 43:1 சங் 119:154 1சாமு 24:15 நீதி 22:23 நீதி 23:11 எரே 51:36 புலம் 3:58 மீகா 7:9 |
| 2 | நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். | சங் 7:12 சங் 7:13 யாத் 15:3 உபா 32:41 உபா 32:42 ஏசா 13:5 ஏசா 42:13 |
| 3 | என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும். | சங் 27:2 சங் 76:10 1சாமு 23:26 1சாமு 23:27 யோபு 1:10 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 10:12 அப் 4:28 |
| 4 | என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. | சங் 35:26 சங் 31:17 சங் 31:18 சங் 40:14 சங் 40:15 சங் 70:2 சங் 70:3 சங் 71:24 |
| 5 | அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. | சங் 1:4 சங் 83:13-17 யோபு 21:18 ஏசா 17:13 ஏசா 29:5 ஓசி 13:3 |
| 6 | அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. | சங் 73:18 நீதி 4:19 எரே 13:16 எரே 23:12 |
| 7 | முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். | சங் 7:3-5 சங் 25:3 சங் 64:4 யோவா 15:25 |
| 8 | அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. | சங் 64:7 சங் 73:18-20 நீதி 29:1 லூக் 21:34 1தெச 5:3 |
| 9 | என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். | சங் 13:5 சங் 21:1 சங் 33:21 சங் 48:11 சங் 58:10 சங் 58:11 சங் 68:1-3 1சாமு 2:1 ஏசா 61:10 ஆபகூ 3:18 லூக் 1:46 லூக் 1:47 கலா 5:22 பிலிப் 3:1-3 |
| 10 | சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும். | சங் 22:14 சங் 32:3 சங் 34:20 சங் 38:3 சங் 51:8 சங் 102:3 யோபு 33:19-25 |
| 11 | கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். | சங் 27:12 1சாமு 24:9 1சாமு 25:10 மத் 26:59 மத் 26:60 அப் 6:13 அப் 24:5 அப் 24:6 அப் 24:12 அப் 24:13 |
| 12 | நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். | சங் 38:20 சங் 109:3-5 1சாமு 19:4 1சாமு 19:5 1சாமு 19:15 1சாமு 22:13 1சாமு 22:14 நீதி 17:13 எரே 18:20 யோவா 10:32 |
| 13 | அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. | சங் 69:10 சங் 69:11 யோபு 30:25 மத் 5:44 ரோம 12:14 ரோம 12:15 |
| 14 | நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்த்து நடந்தேன். | 2சாமு 1:11 2சாமு 1:12 2சாமு 1:17-27 லூக் 19:41 லூக் 19:42 |
| 15 | ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். | சங் 35:25 சங் 35:26 சங் 41:8 சங் 71:10 சங் 71:11 யோபு 31:29 நீதி 17:5 நீதி 24:17 நீதி 24:18 |
| 16 | அப்பத்திற்காக இச்சகம் பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள். | 1சாமு 20:24-42 ஏசா 1:14 ஏசா 1:15 யோவா 18:28 1கொரி 5:8 |
| 17 | ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். | சங் 6:3 சங் 13:1 சங் 13:2 சங் 74:9 சங் 74:10 சங் 89:46 சங் 94:3 சங் 94:4 |
| 18 | மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். | சங் 22:22-25 சங் 22:31-25 சங் 40:9 சங் 40:10 சங் 69:30-34 சங் 111:1 சங் 116:14 சங் 116:18 எபிரெ 2:12 |
| 19 | வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. | சங் 35:15 சங் 13:4 சங் 25:2 சங் 38:16 யோவா 16:20-22 வெளிப் 11:7-10 |
| 20 | அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். | சங் 120:5-7 |
| 21 | எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். | சங் 22:13 ஏசா 9:12 லூக் 11:53 லூக் 11:54 |
| 22 | கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். | யாத் 3:7 அப் 7:34 |
| 23 | என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். | சங் 7:6 சங் 44:23 சங் 80:2 ஏசா 51:9 |
| 24 | என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும். | சங் 7:8 சங் 18:20-24 சங் 26:1 சங் 43:1 2தெச 1:6 1பேது 2:22 |
| 25 | அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். | சங் 27:12 சங் 28:3 சங் 70:3 சங் 74:8 யோபு 1:5 மாற் 2:6 மாற் 2:8 |
| 26 | எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள். | சங் 35:4 சங் 40:14 சங் 40:15 சங் 71:13 சங் 129:5 சங் 132:18 ஏசா 41:11 ஏசா 65:13-15 |
| 27 | என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். | சங் 40:16 சங் 68:3 சங் 132:9 சங் 132:16 சங் 142:7 ஏசா 66:10 ஏசா 66:11 யோவா 16:22 ரோம 12:15 1கொரி 12:26 |
| 28 | என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். | சங் 34:1 சங் 50:15 சங் 51:14 சங் 51:15 சங் 71:24 சங் 104:33 சங் 104:34 சங் 145:1 சங் 145:2 சங் 145:5 சங் 145:21 |