| 1 | கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். | ஆதி 20:2 ஆதி 26:1 1சாமு 21:13-15 நீதி 29:25 |
| 2 | கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். | சங் 44:8 சங் 105:3 ஏசா 45:25 எரே 9:24 1கொரி 1:31 2கொரி 10:17 |
| 3 | என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. | சங் 35:27 சங் 40:16 சங் 69:30 லூக் 1:46 அப் 19:17 பிலிப் 1:20 |
| 4 | நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். | சங் 18:6 சங் 22:24 சங் 31:22 சங் 77:1 சங் 77:2 சங் 116:1-6 யோனா 2:2 மத் 7:7 லூக் 11:9 2கொரி 12:8 2கொரி 12:9 எபிரெ 5:7 |
| 5 | அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. | சங் 123:1 சங் 123:2 ஏசா 45:22 எபிரெ 12:2 |
| 6 | இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். | சங் 3:4 சங் 10:17 சங் 40:17 சங் 66:16-20 |
| 7 | கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். | சங் 91:11 2இரா 6:17 2இரா 19:35 தானி 6:22 மத் 18:10 லூக் 16:22 எபிரெ 1:14 |
| 8 | கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். | சங் 63:5 சங் 119:103 உன்ன 2:3 உன்ன 5:1 எபிரெ 6:4 எபிரெ 6:5 1பேது 2:2 1பேது 2:3 1யோவா 1:1-3 |
| 9 | கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. | சங் 22:23 சங் 31:23 சங் 89:7 ஆதி 22:12 ஏசா 8:13 ஏசா 8:14 ஓசி 3:5 வெளிப் 15:3 வெளிப் 15:4 |
| 10 | சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது. | சங் 104:21 யோபு 4:10 யோபு 4:11 லூக் 1:51-53 |
| 11 | பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். | நீதி 4:1 நீதி 7:24 நீதி 8:17 நீதி 8:32 நீதி 22:6 பிரச 11:9 பிரச 11:10 பிரச 12:1 ஏசா 28:9 மத் 18:2-4 மாற் 10:14-16 யோவா 13:33 2தீமோ 3:15 |
| 12 | நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? | சங் 21:4 சங் 91:16 உபா 6:2 உபா 30:20 1பேது 3:10 1பேது 3:11 |
| 13 | உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். | சங் 39:1 நீதி 18:21 மத் 12:35-37 யாக் 1:19 யாக் 1:26 யாக் 3:2 யாக் 3:5-10 |
| 14 | தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். | சங் 37:27 யோபு 28:28 நீதி 3:7 நீதி 8:13 நீதி 13:14 நீதி 16:16 நீதி 16:17 ஏசா 1:16 ஏசா 1:17 ரோம 12:9 2தீமோ 2:19 1பேது 3:11 |
| 15 | கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. | சங் 33:18 யோபு 36:7 1பேது 3:12 |
| 16 | தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. | லேவி 17:10 லேவி 26:17 எரே 44:11 எசே 14:7 எசே 14:8 ஆமோ 9:4 |
| 17 | நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். | சங் 34:6 சங் 34:15 சங் 34:19 சங் 91:15 சங் 145:18-20 2நாளா 32:20 2நாளா 32:21 2நாளா 32:24 ஏசா 65:24 அப் 12:5-11 |
| 18 | நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். | சங் 75:1 சங் 85:9 சங் 119:151 சங் 145:18 ஏசா 55:6 |
| 19 | நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். | சங் 71:20 யோபு 5:19 யோபு 30:9-31 யோபு 42:12 நீதி 24:16 யோவா 16:33 அப் 14:22 2கொரி 4:7-12 2கொரி 4:17-12 2கொரி 11:23-27 1தெச 3:3 1தெச 3:4 2தீமோ 3:11 2தீமோ 3:12 எபிரெ 11:33-38 யாக் 5:10 யாக் 5:11 1பேது 4:12 1பேது 4:13 வெளிப் 7:14-17 |
| 20 | அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. | சங் 35:10 சங் 91:12 தானி 6:22-24 யோவா 19:36 |
| 21 | தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். | சங் 37:30-40 சங் 94:23 ஏசா 3:11 |
| 22 | கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. | சங் 31:5 சங் 71:23 சங் 103:4 சங் 130:8 ஆதி 48:16 2சாமு 4:9 1இரா 1:29 புலம் 3:58 1பேது 1:18 1பேது 1:19 வெளிப் 5:9 |