| 1 | நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். | சங் 32:11 சங் 97:12 1கொரி 1:30 1கொரி 1:31 பிலிப் 4:4 |
| 2 | சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். | சங் 81:2 சங் 81:3 சங் 92:3 சங் 98:4 சங் 98:5 சங் 144:9 சங் 149:3 சங் 150:3-6 யாத் 15:20 2சாமு 6:5 1நாளா 15:16 1நாளா 15:28 1நாளா 25:3 1நாளா 25:6 வெளிப் 5:8 வெளிப் 14:2 |
| 3 | அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள். | சங் 96:1 சங் 98:1 சங் 144:9 சங் 149:1 ஏசா 42:10 எபே 5:19 கொலோ 3:16 வெளிப் 5:9 வெளிப் 14:3 |
| 4 | கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. | சங் 12:6 சங் 19:8 சங் 119:75 சங் 119:128 நீதி 30:5 மீகா 2:7 ரோம 7:12 |
| 5 | அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. | சங் 11:7 சங் 45:7 சங் 99:4 எபிரெ 1:9 வெளிப் 15:3 வெளிப் 15:4 |
| 6 | கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. | சங் 33:9 சங் 148:1-5 ஆதி 1:1 ஆதி 6:7 யோவா 1:1-3 எபிரெ 11:3 2பேது 3:5 |
| 7 | அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். | சங் 104:6-9 ஆதி 1:9 ஆதி 1:10 யோபு 26:10 யோபு 38:8-11 நீதி 8:29 எரே 5:22 |
| 8 | பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. | சங் 22:27 சங் 96:9 சங் 96:10 எரே 10:7-12 தானி 6:25 தானி 6:26 வெளிப் 14:6 வெளிப் 14:7 வெளிப் 15:4 |
| 9 | அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். | சங் 33:6 சங் 148:5 சங் 148:6 ஆதி 1:3 எபிரெ 11:3 |
| 10 | கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். | சங் 2:1-4 சங் 9:15 யாத் 1:10-12 2சாமு 15:31 2சாமு 15:34 2சாமு 17:14 2சாமு 17:23 யோபு 5:12 யோபு 5:13 நீதி 21:30 ஏசா 7:5-7 ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 19:3 ஏசா 19:11-14 ஏசா 44:23 |
| 11 | கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். | யோபு 23:13 நீதி 19:21 ஏசா 14:24 ஏசா 14:27 ஏசா 46:10 புலம் 3:37 எசே 38:10-23 தானி 4:37 அப் 4:27 அப் 4:28 எபே 1:11 |
| 12 | கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. | சங் 144:15 சங் 147:19 சங் 147:20 யாத் 19:5 யாத் 19:6 உபா 33:29 |
| 13 | கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். | சங் 11:4 சங் 14:2 சங் 102:19 ஆதி 6:12 2நாளா 16:9 யோபு 28:24 நீதி 15:3 புலம் 3:50 |
| 14 | தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். | சங் 123:1 1இரா 8:27 1இரா 8:30 ஏசா 57:15 ஏசா 66:1 லூக் 11:2 1தீமோ 6:16 |
| 15 | அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். | நீதி 22:2 நீதி 27:19 பிரச 7:29 ஏசா 64:8 அப் 17:26 |
| 16 | எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். | சங் 44:3 சங் 44:6 சங் 44:7 யாத் 14:17 யாத் 14:18 யாத் 14:28 யோசு 11:4-8 நியா 7:2 நியா 7:12-25 1சாமு 14:8-16 1இரா 20:10 1இரா 20:27-29 2நாளா 14:9-13 2நாளா 20:12 2நாளா 20:23 2நாளா 32:8 2நாளா 32:9 2நாளா 32:21 |
| 17 | இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. | சங் 20:7 நியா 4:15 2இரா 7:6 2இரா 7:7 நீதி 21:31 பிரச 9:11 ஏசா 30:16 ஓசி 14:3 |
| 18 | தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; | சங் 34:15-20 சங் 147:11 யோபு 36:7 1பேது 3:12 |
| 19 | பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. | சங் 91:3-7 சங் 91:10-7 யோவா 10:28 யோவா 10:30 |
| 20 | நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். | சங் 27:14 சங் 62:1 சங் 62:2 சங் 62:5 சங் 62:6 சங் 130:5 சங் 130:6 ஏசா 40:31 |
| 21 | அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். | சங் 13:5 சங் 28:7 சங் 30:10-12 சங் 32:10 சங் 32:11 ஏசா 25:9 சகரி 10:7 யோவா 16:22 |
| 22 | கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. | சங் 5:11 சங் 5:12 சங் 13:5 சங் 32:10 சங் 119:49 சங் 119:76 மத் 9:29 |