| 1 | எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். | சங் 42:1 சங் 45:1 சங் 52:1 சங் 53:1 சங் 55:1 |
| 2 | எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். | லேவி 17:4 ரோம 5:13 2கொரி 5:19-21 |
| 3 | நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. | ஆதி 3:8-19 1சாமு 31:13 2சாமு 11:27 2சாமு 12:1-12 2சாமு 21:12-14 நீதி 28:13 ஏசா 57:17 எரே 31:18 எரே 31:19 லூக் 15:15 லூக் 15:16 |
| 4 | இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா) | சங் 38:2-8 சங் 39:10 சங் 39:11 1சாமு 5:6 1சாமு 5:7 1சாமு 5:9 1சாமு 5:11 1சாமு 6:9 யோபு 16:21 யோபு 33:7 |
| 5 | நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா) | சங் 38:18 சங் 51:3-5 லேவி 26:39 லேவி 26:40 யோசு 7:19 2சாமு 12:13 2சாமு 24:10 யோபு 33:27 நீதி 28:13 எரே 3:13 1யோவா 1:8-10 |
| 6 | இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. | சங் 34:2-5 சங் 40:3 சங் 51:12 சங் 51:13 2கொரி 1:4 1தீமோ 1:16 |
| 7 | நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா) | சங் 9:9 சங் 27:5 சங் 31:20 சங் 119:114 சங் 143:9 எரே 36:26 கொலோ 3:3 |
| 8 | நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். | சங் 34:11 நீதி 3:1 நீதி 4:1-13 நீதி 8:10 நீதி 8:11 மத் 11:29 |
| 9 | வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். | நீதி 26:3 எரே 31:18 யாக் 3:3 யாக் 4:7-10 |
| 10 | துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். | சங் 16:4 சங் 34:19-21 சங் 140:11 நீதி 13:21 பிரச 8:12 ஏசா 3:11 ஏசா 57:21 ரோம 2:8 ரோம 2:9 1தீமோ 6:10 |
| 11 | நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள். | சங் 33:1 சங் 64:10 சங் 68:3 சங் 97:12 உபா 12:12 1சாமு 2:1 ரோம 5:11 பிலிப் 3:1 பிலிப் 3:3 பிலிப் 4:4 |