| 1 | கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். | சங் 22:4 சங் 22:5 சங் 25:2 சங் 71:1 சங் 71:2 ஏசா 49:23 ரோம 5:5 ரோம 10:11 |
| 2 | உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். | சங் 71:2 சங் 86:1 சங் 130:2 நீதி 22:17 |
| 3 | என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். | சங் 23:2 சங் 23:3 சங் 25:11 சங் 79:9 யோசு 7:9 எரே 14:7 எசே 36:21 எசே 36:22 எபே 1:12 |
| 4 | அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண். | சங் 25:15 சங் 35:7 சங் 57:6 சங் 124:7 சங் 140:5 நீதி 29:5 2தீமோ 2:26 |
| 5 | உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். | லூக் 23:46 அப் 7:59 2தீமோ 1:12 |
| 6 | வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன். | சங் 26:5 சங் 139:2 |
| 7 | உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர். | சங் 13:5 ஏசா 49:13 எரே 33:11 |
| 8 | சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். | சங் 88:8 உபா 32:30 1சாமு 17:46 1சாமு 24:18 1சாமு 26:8 யோபு 16:11 ஏசா 19:4 |
| 9 | எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று. | சங் 6:7 சங் 88:9 யோபு 17:7 புலம் 4:17 புலம் 5:17 |
| 10 | என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. | சங் 78:33 சங் 88:15 சங் 102:3-28 யோபு 3:24 ரோம 9:2 |
| 11 | என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். | சங் 22:6 சங் 69:19 சங் 69:20 சங் 89:50 சங் 89:51 ஏசா 49:7 ஏசா 53:4 ஏசா 53:5 மத் 27:39-44 ரோம 15:3 எபிரெ 11:36 எபிரெ 13:13 1பேது 4:14 |
| 12 | செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன். | சங் 88:4 சங் 88:5 ஏசா 38:11 ஏசா 38:12 |
| 13 | அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள். | சங் 55:10 சங் 101:5 1சாமு 22:8-10 1சாமு 24:9 எரே 20:10 லூக் 23:1 லூக் 23:2 லூக் 23:5 |
| 14 | நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். | சங் 16:1 சங் 16:2 சங் 18:2 சங் 22:1 சங் 22:2 சங் 43:5 சங் 56:3 சங் 56:4 சங் 63:1 சங் 71:12 சங் 71:22 மத் 26:39 மத் 26:42 மத் 27:46 யோவா 20:17 |
| 15 | என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். | சங் 116:15 1சாமு 26:10 2சாமு 7:12 யோபு 24:1 பிரச 3:1-8 லூக் 9:51 யோவா 7:6 யோவா 7:30 யோவா 12:27 யோவா 13:1 யோவா 17:1 அப் 1:7 அப் 23:11 அப் 27:24 2தீமோ 4:6 2பேது 1:14 |
| 16 | நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும். | சங் 4:6 சங் 30:7 சங் 67:1 சங் 80:3 சங் 80:7 சங் 80:19 எண் 6:25 எண் 6:26 தானி 9:17 |
| 17 | கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும். | சங் 31:1 சங் 25:2 சங் 25:3 சங் 34:5 சங் 69:6 சங் 69:7 ஏசா 50:6 ஏசா 50:7 யோவே 2:26 யோவே 2:27 |
| 18 | நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. | சங் 12:3 சங் 59:12 சங் 63:11 சங் 140:9-11 நீதி 12:19 ஏசா 54:17 யோவா 8:44 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 19 | உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! | சங் 36:7-10 சங் 73:1 சங் 73:24-26 சங் 145:7-9 ஏசா 64:4 புலம் 3:23-25 1கொரி 2:9 1யோவா 3:1 1யோவா 3:2 |
| 20 | மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். | சங் 27:5 சங் 32:7 சங் 64:2 சங் 91:1-4 |
| 21 | கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம். | சங் 17:7 சங் 98:1 சங் 118:23 1பேது 2:9 |
| 22 | உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். | சங் 116:11 1சாமு 23:26 1சாமு 27:1 |
| 23 | கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். | சங் 34:9 சங் 97:10 உபா 10:12 உபா 30:16 ஏசா 56:6 மாற் 12:23 1தெச 4:1 |
| 24 | கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். | சங் 27:14 ஏசா 35:3 ஏசா 35:4 லூக் 22:31 லூக் 22:32 எபிரெ 12:12 எபிரெ 12:13 யாக் 5:10 யாக் 5:11 |