| 1 | கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். | 2சாமு 24:25 1நாளா 21:6 |
| 2 | என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். | சங் 6:2 சங் 51:8 சங் 103:3 சங் 103:4 சங் 107:17-22 சங் 118:18 சங் 147:3 ஆதி 20:17 யாத் 15:26 2இரா 20:5 யாக் 5:14 யாக் 5:15 |
| 3 | கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். | சங் 16:10 சங் 40:1 சங் 40:2 சங் 56:13 சங் 71:20 சங் 86:13 சங் 116:8 யோபு 33:19-22 யோபு 33:28-22 ஏசா 38:17 ஏசா 38:18 யோனா 2:4-6 |
| 4 | கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். | சங் 32:11 சங் 33:1-3 சங் 97:12 சங் 103:20-22 சங் 132:9 சங் 135:19-21 சங் 148:14 சங் 149:1 1நாளா 16:4 வெளிப் 19:5 வெளிப் 19:6 |
| 5 | ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். | சங் 103:9 சங் 103:17 ஏசா 26:20 ஏசா 54:7 ஏசா 54:8 ஏசா 57:15 ஏசா 57:16 2கொரி 4:17 |
| 6 | நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என்று, நான் வளமுடன் இருக்கையில் சொன்னேன். | யோபு 29:18-20 ஏசா 47:7 ஏசா 56:12 தானி 4:30 லூக் 12:19 2கொரி 12:7 |
| 7 | கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; | சங் 30:5 சங் 5:12 சங் 18:35 சங் 18:36 சங் 44:3 சங் 89:17 யோபு 10:12 |
| 8 | நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? | சங் 34:6 சங் 77:1 சங் 77:2 சங் 130:1 சங் 130:2 1கொரி 12:8 1கொரி 12:9 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
| 9 | கர்த்தாவே, நீ எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி; | சங் 6:5 சங் 88:10-12 சங் 115:17 சங் 115:18 சங் 118:17 பிரச 9:10 ஏசா 38:18 |
| 10 | கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். | சங் 51:1 சங் 51:2 சங் 143:1 சங் 143:7-9 |
| 11 | என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர். | சங் 30:5 சங் 126:1 சங் 126:2 ஆதி 37:35 ஆதி 45:28 2நாளா 20:3 2நாளா 20:9 2நாளா 20:12 2நாளா 20:27 2நாளா 20:28 எஸ்தர் 9:22 ஏசா 25:8 ஏசா 25:3 ஏசா 66:10 ஏசா 66:11 யோவா 16:20 வெளிப் 7:14-17 வெளிப் 21:4 |
| 12 | என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். | சங் 16:9 சங் 57:8 ஆதி 49:6 |