இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 29

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.சங் 2:10-12 சங் 68:31-34 சங் 96:7-9 ஏசா 60:12 எரே 13:16-18 வெளிப் 5:11-14
2கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.1நாளா 16:28 1நாளா 16:29
3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.சங் 18:13-15 சங் 77:16-19 மத் 8:26 மத் 8:27 வெளிப் 17:14 வெளிப் 17:15
4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.சங் 33:9 யோபு 26:11-14 எரே 51:15 எரே 51:16 லூக் 4:36 லூக் 8:25
5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுமரங்களை முறிக்கிறார்.ஏசா 2:13
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.சங் 114:4-7
7கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.சங் 77:18 சங் 144:5 சங் 144:6 யாத் 9:23 லேவி 10:2 எண் 16:35 2இரா 1:10-12 யோபு 37:3 யோபு 38:35
8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.சங் 18:7 சங் 46:3 யோபு 9:6 ஏசா 13:13 யோவே 3:16 ஆகா 2:6 ஆகா 2:21 எபிரெ 12:26
9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் 'கர்த்தருக்கு மகிமை' என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.யோபு 39:1-3
10கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.சங் 29:3 சங் 65:7 சங் 104:6-9 ஆதி 6:17 ஆதி 8:1 ஆதி 8:2 யோபு 38:8-11 யோபு 38:25-11 மாற் 4:41
11கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.சங் 28:8 சங் 28:9 சங் 68:35 சங் 84:7 சங் 85:8 சங் 85:10 சங் 138:3 ஏசா 40:29 ஏசா 40:31 ஏசா 41:10 சகரி 10:6 சகரி 10:12 எபே 3:16 2தீமோ 4:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.