1என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.சங் 3:4 சங் 5:2 சங் 22:2 சங் 77:1 சங் 142:1 2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 63:4 சங் 125:5 சங் 134:2 சங் 141:2 சங் 143:6 2நாளா 6:13 1தீமோ 2:8 3அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.சங் 26:9 எண் 16:26 மத் 25:41 மத் 25:46 4அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.சங் 5:10 சங் 59:12 சங் 59:13 சங் 69:22-24 எரே 18:21-23 2தீமோ 4:14 வெளிப் 18:6 5அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.சங் 10:5 சங் 92:4-6 சங் 104:24 சங் 111:2-4 யோபு 34:26 யோபு 34:27 ஏசா 5:12 ஏசா 22:11 ஏசா 26:9-11 ஓசி 14:9 யோவா 12:37 ரோம 1:20 ரோம 1:28 6கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.சங் 31:21 சங் 31:22 சங் 66:19 சங் 66:20 சங் 69:33 சங் 69:34 சங் 107:19-22 சங் 116:1 சங் 116:2 சங் 118:5 7கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.சங் 28:8 சங் 18:1 சங் 18:2 சங் 19:14 சங் 46:1 ஏசா 12:2 ஏசா 45:24 எபே 6:10 8கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.சங் 2:2 சங் 20:6 1சாமு 16:13 ஏசா 61:1 9தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.சங் 14:7 சங் 25:22 சங் 80:14-19 எரே 31:7