| 1 | கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்? | சங் 18:28 சங் 84:11 யோபு 29:3 ஏசா 2:5 ஏசா 60:1-3 ஏசா 60:19-3 ஏசா 60:20-3 மீகா 7:7 மீகா 7:8 மல்கி 4:2 யோவா 1:1-5 யோவா 1:9-5 யோவா 8:12 வெளிப் 21:23 வெளிப் 22:5 |
| 2 | என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருங்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். | சங் 3:7 சங் 18:4 சங் 22:16 சங் 62:3 சங் 62:4 |
| 3 | எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். | சங் 3:6 சங் 52:6 2இரா 6:15-17 2நாளா 20:15 பிலிப் 1:28 1பேது 3:14 |
| 4 | கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். | சங் 26:8 லூக் 10:42 பிலிப் 3:13 |
| 5 | தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். | சங் 10:1 சங் 32:6 சங் 32:7 சங் 46:1 சங் 50:15 சங் 77:2 சங் 91:15 சங் 138:7 நீதி 1:24-28 ஏசா 26:16 எரே 2:27 எரே 2:28 |
| 6 | இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். | சங் 3:3 சங் 110:7 ஆதி 40:13 ஆதி 40:20 2இரா 25:27 |
| 7 | கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் அருளும். | சங் 4:1 சங் 5:2 சங் 130:2-4 சங் 143:1 சங் 143:2 |
| 8 | என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. | சங் 24:6 சங் 105:4 ஏசா 45:19 ஏசா 55:6 ஏசா 55:7 ஓசி 5:15 |
| 9 | உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாதிரும் என்னைக் கைவிடாதிரும். | சங் 13:1 சங் 44:24 சங் 69:17 சங் 102:2 சங் 143:7 ஏசா 59:2 |
| 10 | என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். | சங் 69:8 2சாமு 16:11 ஏசா 49:15 மத் 10:21 மத் 10:22 மத் 10:36 |
| 11 | கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். | சங் 25:4 சங் 25:5 சங் 25:9 சங் 25:12 சங் 86:11 சங் 119:10 சங் 143:8-10 நீதி 2:6-9 ஏசா 30:20 ஏசா 30:21 |
| 12 | என் சத்தருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக் கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். | சங் 31:8 சங் 35:25 சங் 38:16 சங் 41:11 சங் 140:8 |
| 13 | நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். | சங் 42:5 சங் 56:3 சங் 116:9-11 2கொரி 4:1 2கொரி 4:8-14 2கொரி 4:16-14 எபே 2:8 |
| 14 | கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு. | சங் 25:3 சங் 25:21 சங் 31:24 சங் 33:20 சங் 62:1 சங் 62:5 சங் 130:5 ஆதி 49:18 ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 30:18 புலம் 3:26 ஆபகூ 2:3 லூக் 2:25 லூக் 2:38 ரோம 8:25 |