| 1 | தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். | சங் 56:1 சங் 60:1 |
| 2 | என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; | சங் 8:1 சங் 27:8 சங் 31:14 சங் 89:26 சங் 91:2 ஏசா 26:13 ஏசா 44:5 சகரி 13:9 யோவா 20:28 |
| 3 | பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய். | கலா 6:10 தீத் 3:8 எபிரெ 6:10 |
| 4 | அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். | சங் 32:10 சங் 97:7 யோனா 2:8 வெளிப் 14:9-11 வெளிப் 18:4 வெளிப் 18:5 |
| 5 | கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். | சங் 73:26 சங் 119:57 சங் 142:5 உபா 32:9 எரே 10:16 புலம் 3:24 |
| 6 | நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. | சங் 78:55 ஆமோ 7:17 |
| 7 | எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். | சங் 73:24 சங் 119:7 நீதி 8:14 ஏசா 11:2-4 ஏசா 48:17 ஏசா 50:4 |
| 8 | கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. | சங் 139:18 அப் 2:25-28 எபிரெ 11:27 |
| 9 | ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். | லூக் 10:21 லூக் 10:22 |
| 10 | என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். | சங் 9:17 சங் 49:15 சங் 139:8 லேவி 19:28 எண் 6:6 உபா 32:22 யோபு 11:8 நீதி 15:11 நீதி 27:20 ஏசா 5:14 ஏசா 14:9 ஆமோ 9:2 லூக் 16:23 அப் 3:15 1கொரி 15:55 வெளிப் 1:18 வெளிப் 20:13 |
| 11 | ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. | சங் 21:4 நீதி 2:19 நீதி 4:18 நீதி 5:6 நீதி 12:28 ஏசா 2:3 மத் 7:14 ரோம 8:11 1பேது 1:21 |