| 1 | கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும். | சங் 86:1 சங் 142:1 |
| 2 | உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவனவாக. | சங் 37:6 சங் 37:33 2தெச 1:6-9 யூதா 1:24 |
| 3 | நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன். | சங் 11:5 சங் 26:2 சங் 66:10 சங் 139:1 யோபு 23:10 சகரி 13:9 மல்கி 3:2 1கொரி 4:4 1பேது 1:7 |
| 4 | மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன். | சங் 14:1-3 ஆதி 6:5 ஆதி 6:11 யோபு 15:16 யோபு 31:33 1கொரி 3:3 1பேது 4:2 1பேது 4:3 |
| 5 | என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை. | சங் 119:116 சங் 119:117 சங் 119:133 சங் 121:3 சங் 121:7 1சாமு 2:9 எரே 10:23 |
| 6 | தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதிலருளுவீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும். | சங் 55:16 சங் 66:19 சங் 66:20 சங் 116:2 |
| 7 | உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். | சங் 31:21 சங் 78:12 ரோம 5:20 ரோம 5:21 வெளிப் 15:3 |
| 8 | கண்மணியைப்போல என்னைக் காத்து. | உபா 32:10 நீதி 7:2 சகரி 2:8 |
| 9 | என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணின் பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். | 1நாளா 17:9 |
| 10 | அவர்கள் கொழுத்துப்போய், தங்கள் வாயினால் இருமாப்பாய் பேசுகிறார்கள். | சங் 73:7-9 சங் 119:70 உபா 32:15 யோபு 15:27 ஏசா 6:10 மத் 13:15 அப் 28:27 |
| 11 | நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கின்றன. | 1சாமு 23:26 1சாமு 24:2 1சாமு 24:3 1சாமு 26:2 1சாமு 26:3 |
| 12 | பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள். | சங் 7:2 சங் 22:13 2தீமோ 4:17 1பேது 5:8 |
| 13 | கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும். | சங் 3:7 சங் 7:6 சங் 44:23 சங் 44:26 சங் 119:126 ஏசா 51:9 |
| 14 | கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். | லூக் 16:8 யோவா 8:23 யோவா 15:19 யோவா 17:14 1யோவா 4:4 1யோவா 4:5 |
| 15 | நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். | சங் 5:7 யோசு 24:15 |