1கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?சங் 1:1-4 சங் 23:6 சங் 21:3-5 சங் 27:4 சங் 61:4 சங் 84:4 சங் 92:13 யோவா 3:3-5 யோவா 14:3 யோவா 17:24 வெளிப் 7:14-17 வெளிப் 21:3 வெளிப் 21:4 வெளிப் 21:23 வெளிப் 21:24 2உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.சங் 84:11 நீதி 2:7 நீதி 2:8 நீதி 28:18 ஏசா 33:15 மீகா 2:7 லூக் 1:6 கலா 2:14 1யோவா 2:6 3அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.சங் 101:5-8 யாத் 23:1-33 லேவி 19:16 எரே 9:4-9 ரோம 1:30 தீத் 3:2 யாக் 4:11 1பேது 2:1 1பேது 2:2 4ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.சங் 101:4 2இரா 3:13 2இரா 3:14 எஸ்தர் 3:2 யோபு 32:21 யோபு 32:22 ஏசா 32:5 ஏசா 32:6 தானி 5:17-31 அப் 24:2 அப் 24:3 அப் 24:25 யாக் 2:1-9 5தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் இலஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.யாத் 22:25 லேவி 25:35-37 உபா 23:19 உபா 23:20 நெகே 5:2-5 நெகே 5:7-13 எசே 18:8 எசே 18:17 எசே 22:12