1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?சங் 6:3 சங் 35:17 சங் 74:1 சங் 80:4 சங் 85:5 சங் 89:46 சங் 90:14 சங் 94:3 சங் 94:4 2என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?சங் 77:2-12 சங் 94:18 சங் 94:19 சங் 142:4-7 யோபு 7:12-15 யோபு 9:19-21 யோபு 9:27-21 யோபு 9:28-21 யோபு 10:15 யோபு 23:8-10 எரே 15:18 3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் அருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங் 9:13 சங் 25:19 சங் 31:7 சங் 119:153 புலம் 5:1 4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.சங் 10:11 சங் 25:2 சங் 35:19 சங் 35:25 சங் 38:16 யோசு 7:9 எசே 35:12-15 5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங் 32:10 சங் 33:18 சங் 33:21 சங் 33:22 சங் 36:7 சங் 52:8 சங் 147:11 ஏசா 12:2 யூதா 1:21 6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.சங் 21:13